வெள்ளலுாரில் விளக்கு எரிவதில்லைவெள்ளலுார் இடையர்பாளையம் ரேஷன் கடை முன் உள்ள, மின் கம்பத்தில், கடந்த சில நாட்களாக, விளக்கு எரிவதில்லை.- சுரேஷ், இடையர்பாளையம்.
மின் விபத்து அபாயம்கோவைபுதுார் - பேரூர் ரோடு, ஆறுமுகக் கவுண்டனுார் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள, திருப்பத்தில், சிதிலமடைந்து விழும் நிலையில் உள்ள, மின் கம்பத்தை அகற்றி விட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- ஆனந்தன், ஆறுமுகக் கவுண்டனுார்.
துாய்மை பணியாளர்கள் எங்கே?சிங்காநல்லுார், அக்ரஹாரம் பகுதிக்கு, துாய்மை பணியாளர்கள் வராததால், ஆங்காங்கே குப்பை குவிந்துள்ளது. சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கியுள்ளது.- ேஹமா, சிங்காநல்லுார்.
சாலையை சீரமைக்கணும்மாநகராட்சி, 98வது வார்டுக்கு உட்பட்ட, போத்தனுார், மாரியப்பக் கோனார் வீதியில், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சாலை, பணி முடிந்து நீண்ட நாட்களாகியும், சீரமைக்கப்படாமல் உள்ளது; மழை நேரங்களில், ரோடு சேறும் சகதியுமாக மாறி, மக்கள் நடந்து செல்லக்கூட வழியின்றி தவிக்கின்றனர்.- விக்னேஷ், மாரியப்பக்கோனார் வீதி.
சந்தை பகுதியில் வெளிச்சமில்லைமாநகராட்சி, 90வது வார்டுக்கு உட்பட்ட, கோவைபுதுாரில், சந்தை பகுதி மற்றும் பெருமாள் கோவில் வீதியில் உள்ள, மின் கம்பங்களில் விளக்குகள் எரிதில்லை.- தனலட்சுமி, கோவைபுதுார்.
சாலை வசதியில்லைசிங்காநல்லுார், விவேகானந்தர் நகர், பட்டீஸ்வரா அபார்ட்மென்ட் பகுதியில் சாலை வசதி இல்லாததால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- ராமநாதன், விவேகானந்தர் நகர்.
மின் கம்பத்தை மாற்றணும்குனியமுத்துார், இடையர்பாளையம், மணிகண்டன் நகரில் உள்ள, மின் கம்பம் (எண்: 17) சிதிலமடைந்து விழும் நிலையில் உள்ளது. இக்கம்பத்தை அகற்றி விட்டு, புது கம்பம் அமைக்க வேண்டும்.- கோபாலகிருஷ்ணன், மணிகண்டன் நகர்.
பிரதான சாலையில் குப்பை குவியல்மருதமலை ரோடு, நவாவூர் பிரிவில், துாய்மை பணி மேற்கொள்ளப்படாததால், இங்குள்ள குப்பை தொட்டி நிரம்பி வழிகிறது. இதன் அருகிலேயே குப்பை குவிந்துள்ளது. பிரதான சாலையில் இக்குப்பை காற்றில் பறந்து, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- மகேஷ், நவாவூர்.
நெடுஞ்சாலையில் கால்நடைகள்மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா கோவில் அருகில், சாலையில் சுற்றித்திரியும் வீட்டு கால்நடைகளால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது; வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.-சரவணன், கவுண்டம்பாளையம்.
சாக்கடை கால்வாய் அடைப்புநல்லாம்பாளையம், அன்னையப்பன் வீதியில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவு தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது.- ஜெயகுமார், அன்னையப்பன் வீதி.
குழாய் உபைப்பு தண்ணீர் வீண்தாளியூர் பேரூராட்சி, ஒன்றாவது வார்டுக்கு உட்பட்ட, காந்தி காலனியில், பிரதான குழாய் உடைப்பால், தண்ணீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- பரமேஸ்வரன், காந்தி காலனி.
கான்கிரீட் சாலை அமைக்கணும்சரவணம்பட்டி, சிவானந்தபுரம், ஓம் சிவசக்தி நகரில் உள்ள, மண் சாலையை, மழை நேரங்களில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது; இப்பகுதியில் கான்கிரீட் அல்லது தார் சாலை அமைக்க வேண்டும்.- சங்கீதா, ஓம் சிவசக்தி நகர்.
சாலையில் வீணாகிறது குடிநீர்மாநகராட்சி, 91வது வார்டுக்கு உட்பட்ட, கோவைபுதுார், காமாட்சி நகர், மூன்றாவது வீதியில், பிரதான குழாய் உடைப்பால், குடிநீர் வீணாக சாலையில் ஓடுகிறது.- பாலாஜி, கோவைபுதுார்.
விளக்குகள் எரிவதில்லைபொள்ளாச்சி ரோடு, குறிச்சி, குப்பன் போயர் வீதியில் உள்ள, மின் கம்பங்களில் (எண்: 28, 30) கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, விளக்குகள் எரிவதில்லை.- அருண், குப்பன் போயர் வீதி.
வீணாகுது குடிநீர்சிறுவாணி ரோடு, பி.என்.புதுார், பிமெட்டல் பியரிங் கம்பெனி பின்புறம், பிரதான குழாய் உடைப்பால், குடிநீர் வீணாகிறது.- பிரவீன், பி.என்.புதுார்.
வீதி முழுவதும் சாக்கடை கழிவுமண்பாப்பநாயக்கன்புதுார், கல்யாணசுந்தரம் வீதியில், சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவுகளை அகற்றும் துாய்மை பணியாளர்கள் வீடுகள் முன், அக்கழிவு மண்ணை அப்படியே விட்டுச் செல்கின்றனர். வீதி முழுவதும் கழிவு மண்ணாக உள்ளது.- ராஜேஷ், கல்யாணசுந்தரம் வீதி
சிதிலமடைந்த மின் கம்பம்மதுக்கரை பேரூராட்சிக்கு உட்பட்ட, தண்டபாணி தோட்டம் பகுதியில் உள்ள, மின் கம்பம் சிதிலமடைந்துள்ளது. புது கம்பம் அமைக்க வேண்டும் என, பல முறை மின் வாரியத்தில், முறையிட்டும் பலனில்லை.- சோபன், மதுக்கரை.
எல்.ஜி., நகர் பேஸ் 2ல் துர்நாற்றம்வெள்ளலுார், கக்கன் நகர் ரோடு, எல்.ஜி., நகர் பேஸ் 2வில், சாக்கடை கால்வாய் முழுவதும் குப்பை நிரம்பி, அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. இக்கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்.- சஞ்ஜய் குமார், வெள்ளலுார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE