பொது செய்தி

தமிழ்நாடு

சிட்ரா சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
கோவை:சிட்ரா சந்திப்பில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் மாற்று ஏற்பாடுகளை, சோதனை முயற்சியில் மேற்கொண்டு உள்ளனர்.அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, மேம்பால கட்டுமான பணி நடக்கிறது. இதில், சிட்ரா சந்திப்பில் பில்லர் அமைக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.விமானநிலைய பகுதி என்பதால், இங்கு போக்குவரத்து நெரிசலை
 சிட்ரா சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்

கோவை:சிட்ரா சந்திப்பில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் மாற்று ஏற்பாடுகளை, சோதனை முயற்சியில் மேற்கொண்டு உள்ளனர்.அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, மேம்பால கட்டுமான பணி நடக்கிறது. இதில், சிட்ரா சந்திப்பில் பில்லர் அமைக்கும் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.விமானநிலைய பகுதி என்பதால், இங்கு போக்குவரத்து நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.சிக்னல் இயக்கப்படாமல் போக்குவரத்து போலீசார் நான்கு பேர், போக்குவரத்து சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இருந்தும், சிட்ரா-ஜென்னி கிளப் இடையே போக்குவரத்துநெரிசல் அதிகரித்தது. இதனை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பார்வையிட்டு, சோதனை முயற்சியாக சில மாற்றங்களை புகுத்தியுள்ளனர்.இதில், காளப்பட்டி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் சிட்ரா சந்திப்பில் ஹோப்காலேஜ் நோக்கி திரும்ப அனுமதிக்காமல், காளப்பட்டி ரோட்டிலிருந்து இடதுபுறமாக திரும்பி கே.எம்.சி.எச்., மருத்துவமனை முன் 'யூ-டேர்ன்' போட்டு, அவிநாசி ரோட்டில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதே போன்று, விமானநிலைய ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் சிட்ரா சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி, ஜென்னி கிளப் சென்று 'யூ-டேர்ன்' போட்டு, சிட்ரா நோக்கி செல்ல வேண்டும்.நேற்று முதல் இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிட்ரா சந்திப்பில் வாகனங்கள் தேங்குவது குறைந்துள்ளது. அதேநேரம் கே.எம்.சி.எச்., அருகே வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. விமானநிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள், 2 கி.மீ., துாரத்துக்கு சுற்றி செல்வதும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில்குமார் கூறுகையில், ''சிட்ரா சந்திப்பில் சோதனை முயற்சியாக புகுத்தப்பட்டுள்ள, போக்குவரத்து மாற்றத்தின் நன்மை, தீமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X