மருதமலை கோவிலிலும் இனி இலவச மொட்டை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருதமலை கோவிலிலும் இனி இலவச மொட்டை!

Added : செப் 08, 2021
Share
வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மொட்டை அடிக்க, நேற்று முதல் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழக கோவில்களில், முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம், மொட்டை அடிக்க கட்டணம் வசூலிக்கப்படாது என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், இதற்கு முன், மொட்டை அடிக்க, பத்து

வடவள்ளி:மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மொட்டை அடிக்க, நேற்று முதல் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.தமிழக கோவில்களில், முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம், மொட்டை அடிக்க கட்டணம் வசூலிக்கப்படாது என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், இதற்கு முன், மொட்டை அடிக்க, பத்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த, 3,4,5 ஆகிய தேதிகளில், கொரோனா தொற்று காரணமாக, கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.கடந்த, 6ம் தேதி, அமாவாசையை முன்னிட்டு, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. நேற்று பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தமிழக அரசு அறிவித்தபடி, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று முதல் பக்தர்கள் மொட்டை அடிப்பதற்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X