பொது செய்தி

தமிழ்நாடு

தானிய உணவு அவசியம் :பழங்குடிகளுக்கு அறிவுரை

Added : செப் 08, 2021
Share
Advertisement
கூடலுார்:கூடலுார் மண்வயல் ஓடகொல்லி பழங்குடியினர் கிராமத்தில், ஊட்டசத்து வாரத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம்; சீனிவாச சேவை அறக்கட்டளை சார்பில், பழங்குடி பெண்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்ப்பது குறித்து, விழிப்புணர்வு முகாம் நடந்தது.அறக்கட்டளை இயக்குனர் சுந்தர்ராஜன் தலைமை வகித்து பேசுகையில்,''மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன், சீனிவாச

கூடலுார்:கூடலுார் மண்வயல் ஓடகொல்லி பழங்குடியினர் கிராமத்தில், ஊட்டசத்து வாரத்தை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம்; சீனிவாச சேவை அறக்கட்டளை சார்பில், பழங்குடி பெண்கள், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை தவிர்ப்பது குறித்து, விழிப்புணர்வு முகாம் நடந்தது.அறக்கட்டளை இயக்குனர் சுந்தர்ராஜன் தலைமை வகித்து பேசுகையில்,''மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன், சீனிவாச சேவைகள் அறக்கட்டளை மூலம், கடந்த பிப்., மாதம் இங்குள்ள ஐந்து பழங்குடி கிராமங்களை சேர்ந்த பெண்களிடம் மேற்கொண்ட பரிசோதனையில், ஊட்டசத்து குறைபாடு காரணமாக, பலருக்கு ரத்த சோகை பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ''குறைபாட்டை போக்கும் வகையில், அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு இலவசமாக சிறுதானிய உணவுகள் வழங்கப்பட்டு, கண்காணித்து வருகிறோம். அவர்கள் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த உணவுகளை தொடர்ந்தால், ஓராண்டுக்குள் குறைபாட்டிலிருந்து முழுமையாக விடுபட முடியும்,'' என்றார். முகாமில், பழங்குடி பெண்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X