அனுமதியின்றி ட்ரோன் இயக்கம்: மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி 'ட்ரோன்' இயக்கம்: மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

Added : செப் 08, 2021
Share
ஊட்டி:'நீலகிரியில் அனுமதியின்றி 'ட்ரோன்' இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:நீலகிரியில், தற்போது மக்களால் கொண்டாடப்படும் திருமணம், காதணி, பெயர் சூட்டுதல், பூப்பு நீராட்டு விழா மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட விழாக்களில் சமீபகாலமாக புகைப்படங்கள் எடுப்பதற்காக அனுமதி இன்றி, 'ட்ரோன்'

ஊட்டி:'நீலகிரியில் அனுமதியின்றி 'ட்ரோன்' இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, கலெக்டர் எச்சரித்துள்ளார்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:நீலகிரியில், தற்போது மக்களால் கொண்டாடப்படும் திருமணம், காதணி, பெயர் சூட்டுதல், பூப்பு நீராட்டு விழா மற்றும் சமயம் சம்பந்தப்பட்ட விழாக்களில் சமீபகாலமாக புகைப்படங்கள் எடுப்பதற்காக அனுமதி இன்றி, 'ட்ரோன்' உபயோகிப்பது அதிகரித்த வண்ணம் உள்ளது.மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஆளில்லா 'ட்ரோன்' உபயோகப்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. சில முக்கிய தருணங்களில் மட்டும், இதனை உபயோகப்படுத்த சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் துறையின் முன் அனுமதி பெற வேண்டும்.விதிமுறைகளை மீறி உபயோகப்படுத்தப்படும் 'ட்ரோன்' பறிமுதல் செய்யப்படுவதுடன் உரிய சட்ட விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X