இலங்கை உணவுப் பற்றாக்குறைக்கு இயற்கை உரம் காரணமா?

Updated : செப் 08, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான உணவுப் பற்றாக்குறைக்கு, குறைவான அன்னிய செலாவணி கையிருப்பு மட்டும் காரணமல்ல. அந்த நாடு அமல்படுத்தி இருக்கும் இயற்கை உர பயன்பாடுக் கொள்கையும் முக்கிய காரணம். ஆக., 31ம் தேதி, பொருளாதார அவசர நிலையை பிரகடனம் செய்தார் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே. வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களையும், மருந்துகளையும் இறக்குமதி செய்யத் தேவையான
 இலங்கை உணவுப் பற்றாக்குறைக்கு இயற்கை உரம் காரணமா?


இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான உணவுப் பற்றாக்குறைக்கு, குறைவான அன்னிய செலாவணி கையிருப்பு மட்டும் காரணமல்ல. அந்த நாடு அமல்படுத்தி இருக்கும் இயற்கை உர பயன்பாடுக் கொள்கையும் முக்கிய காரணம். ஆக., 31ம் தேதி, பொருளாதார அவசர நிலையை பிரகடனம் செய்தார் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே. வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களையும், மருந்துகளையும் இறக்குமதி செய்யத் தேவையான அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததே, இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.


latest tamil newsமேலும், இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியும், அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றமுமே இதர காரணங்களாகச் சொல்லப்பட்டன. ஆனால், அந்நாட்டின் பணவீக்கம் அதிகமானதற்கு இரண்டு பிரதான காரணங்களை அந்நாட்டு அரசு தெரிவித்தது. பொதுமக்கள் அச்சம்கொரோனா பெருந்தொற்று காரணமாக, இலங்கையின் சுற்றுலாத் துறை கடுமையாக வீழ்ச்சி அடைந்திருப்பதும், உணவுப் பொருட்களின் பதுக்கலுமே காரணங்கள்.ஆனால், இவற்றையெல்லாம் விட, அடிப்படை காரணம் ஒன்று உண்டு.

கடந்த ஏப்., 29ம் தேதி, ராஜபக்சே அரசு ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. இனிமேல், இலங்கையில் விவசாயத்துக்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதே அந்த உத்தரவு. மக்களுடைய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற தொலைநோக்கோடு, இயற்கை உரத்துக்கு மாறுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்தாலும், அன்னிய செலாவணியை மிச்சம் பிடிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில், வெளிநாடுகளில் இருந்து இலங்கை பெருமளவு இறக்குமதி செய்வதில், உரங்களுக்கும், பூச்சிகொல்லிகளுக்கும் முக்கிய இடமுண்டு.இலங்கை அரசின் இந்த திடீர் நடவடிக்கையால், விவசாயிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் தரப்பில் அச்சம் எழுந்துள்ளது. குறிப்பாக, தேயிலை, இலவங்கப்பட்டை, மிளகு, நெல் மற்றும் காய்கறி பயிர் செய்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இயற்கை விவசாயத்துக்கு மாற்றும் 46 பேர் கொண்ட நிபுணர் குழுவில், அதிபர் ராஜபக்சேவால் தேர்வு பெற்றவர் ஹெர்மன் குணரத்னே. இவர் அந்நாட்டில், 'வர்ஜின் டீ' என்ற மிகப்பெரிய தேயிலை உற்பத்தி நிறுவனம் நடத்துபவர். சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனம் அது.'இலங்கை அதிபரது புதிய திட்டத்தால், மொத்த தேயிலை உற்பத்தித் துறையே சிதறுண்டு போய்விட்டது.

'இயற்கை விவசாயத்துக்கு நகர்ந்தால், எங்கள் உற்பத்தி பாதிக்குப் பாதி குறைந்துவிடும். ஆனால், தேயிலை விற்பனை விலையோ 50 சதவீதம் உயரப் போவதில்லை என்பது தான் யதார்த்தம். 'இதனால் இலங்கை சந்திக்கப் போகும் பின்விளைவுகள் மிக மோசமாக இருக்கும்' என்றார் குணரத்னே.இலவங்கப் பட்டையேஇவரது கடும் விமர்சனத்தைக் கண்ட அதிபர் ராஜ்பக்சே, இவரை, நிபுணர் குழுவில் இருந்து நீக்கிவிட்டார்.இலங்கையில் உற்பத்தியாகும் பொருட்களில், அதிகம் ஏற்றுமதியாவது இலவங்கப்பட்டை.

உலக அளவிலான தேவையில் 85 சதவீதத்தைப் பூர்த்தி செய்வது இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் இலவங்கப் பட்டையே. இலங்கை மிளகுக்கும் சர்வதேச மவுசு உண்டு. இயற்கை விவசாயத்தால், அதன் உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படும். காய்கறி உற்பத்திக்கும் இதே நிலையே.இப்படிப்பட்ட தெளிவற்ற எதிர்காலச் சூழல் நிலவுவதால், அங்கே உணவுப் பதுக்கல் ஏற்பட்டுவிட்டது. உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டுவிட்டது. இதைச் சீர்செய்ய, மீண்டும் ரசாயன உர இறக்குமதியை அனுமதிக்க வேண்டும் என்று இலங்கை உள்நாடு விவசாயப் பொருள் உற்பத்தியாளர்கள் கோருகின்றனர். -- நமது நிருபர் --

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan - Chennai,இந்தியா
09-செப்-202103:00:27 IST Report Abuse
Krishnan My request to SriLankan Government is to try and rectify the issues with Organic farming rather than going back to chemicals. Pl save the future generation
Rate this:
Cancel
08-செப்-202115:22:50 IST Report Abuse
kulandai kannan அப்போ நம்மாழ்வாரெல்லாம் டுபாக்கூரா!!??
Rate this:
Cancel
premprakash - vellore,இந்தியா
08-செப்-202111:27:52 IST Report Abuse
premprakash சீனாவின் நட்பு, அந்நிய செலாவணி சேமிப்பு போன்ற காரணங்களால் உலக நாடுகளின் மறைமுக பொருளாதார தடைதான் காரணம். இதனால் தான் இந்தியாவும் அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளின் அடிமையாக உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X