பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு விபரம். வெளியீடு... வேட்பாளர் தேர்வில் பிரதான கட்சிகள் ஜரூர்

Added : செப் 08, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒன்றிய சேர்மன்கள், கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சித் தலைவர்கள், பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான இட ஒதுக்கீடு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம்,

கள்ளக்குறிச்சி : உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒன்றிய சேர்மன்கள், கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சித் தலைவர்கள், பதவிகளுக்கு போட்டியிடுவதற்கான இட ஒதுக்கீடு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு இயங்கி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், மொத்தம் 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளடக்கியுள்ளது.இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மாவட்டத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 19 மாவட்ட கவுன்சிலர்கள், 180 ஒன்றிய கவுன்சிலர்கள், 412 ஊராட்சி தலைவர்கள் பதவிக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது.

அதன்பின், ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் மூலம் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கும் ஒன்றிய சேர்மன் மற்றும் துணை சேர்மன் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அதேபோல், மாவட்ட கவுன்சிலர்களிலிருந்து, மாவட்ட சேர்மனாக ஒருவரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்நிலையில், மாவட்ட சேர்மன், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய சேர்மன், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.மாவட்டத்தில், சங்கராபுரம் ஒன்றியம் ஆதிதிராவிடர் (மகளிர்), தியாகதுருகம் மற்றும் திருநாவலுார் ஒன்றிய சேர்மன் பதவிகள் ஆதிதிராவிடர் (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், திருக்கோவிலுார் ஒன்றிய சேர்மன் பதவிகள் மகளிருக்கு (பொது) ஒதுக்கப்பட்டுள்ளது.

சின்னசேலம், கல்வராயன்மலை, உளுந்துார்பேட்டை ஒன்றிய சேர்மன் பதவிகள் பொது (யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்) என அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் விபரம்: திருக்கோவிலுார் 23, திருநாவலுார் 20, உளுந்துார்பேட்டை 21, கள்ளக்குறிச்சி 23, சின்னசேலம் 21, ரிஷிவந்தியம் 25, சங்கராபுரம் 24, தியாகதுருகம் 16, கல்வராயன்மலை 7 என உள்ளது. மொத்தம் 180 பதவிகளில் ஆதிதிராவிடர் (மகளிர்) 33, ஆதிதிராவிடர் (பொது) 27, பொது (மகளிர்) 57, பொது 58, மலைவாழ் மக்களான எஸ்.டி., (மகளிர்) 3, எஸ்.டி., (பொது) 2 என ஒதுக்கப்பட்டுள்ளது.மாவட்ட கவுன்சிலர் பதவிகள் விபரம்: ஆதிதிராவிடர் (மகளிர்) 4, ஆதிதிராவிடர் (பொது) 3, பொது (மகளிர்) 5, பொது 6 என ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட சேர்மன் பதவி ஆதிதிராவிடர் (மகளிர்) ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊராட்சித் தலைவர் பதவிகள் விபரம்: கள்ளக்குறிச்சி 46, கல்வராயன்மலை 15, ரிஷிவந்தியம் 60, சங்கராபுரம் 44, திருக்கோவிலுார் 60, தியாகதுருகம் 40, திருநாவலுார் 44, உளுந்துார்பேட்டை 53, சின்னசேலம் 50 உள்ளன. இதில், மொத்தம் 412 பதவிகளில் ஆதிதிராவிடர் (மகளிர்) 67, ஆதிதிராவிடர், பொது (மகளிர்) 133, பொது 131 மற்றும் மலைவாழ் எஸ்.டி., (மகளிர்) 6, எஸ்.டி., (பொது) 9 என ஒதுக்கப்பட்டுள்ளது.ஒதுக்கீடு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, பிரதான கட்சியினர் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஊராட்சி தலைவர்கள் பதவிக்கு போட்டியிட தயாராக உள்ளவர்களும் கிராம பகுதியில் தீவிர தேர்தல் களப்பணியாற்றத் துவங்கி விட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X