பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகள் மானியம் பெற அழைப்பு; தோட்டக்கலைத்துறையினர் தகவல்

Added : செப் 08, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தில், விவசாயிகள் மானியம் பெற தோட்டக்கலைத் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா கூறியதாவது:நடப்பாண்டு தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம்,- மானாவாரிப்பகுதி மேம்பாட்டுத்திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தில், மடத்துக்குளம் பகுதியில் 2021--22ம் ஆண்டில், 125

மடத்துக்குளம்:தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தில், விவசாயிகள் மானியம் பெற தோட்டக்கலைத் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.மடத்துக்குளம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் திவ்யா கூறியதாவது:நடப்பாண்டு தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம்,- மானாவாரிப்பகுதி மேம்பாட்டுத்திட்டம், ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தில், மடத்துக்குளம் பகுதியில் 2021--22ம் ஆண்டில், 125 ஏக்கருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம், மானாவாரி பகுதியில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாகும்.துங்காவி, மெட்ராத்தி, முக்கிய கிராமங்களாகவும், மைவாடி, தாந்தோணி, வேடப்பட்டி, காரத்தொழுவு, பாப்பான்குளம், ஜோத்தம்பட்டி, கொமரலிங்கம், சங்கராமநல்லுார் ஆகியவை துணை கிராமங்களாகவும் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.இந்த கிராம விவசாயிகள் இதில் பயன் பெற, ஒரு விவசாயிக்கு குறைந்தபட்சம் இரண்டரை ஏக்கர் விளைநிலம் இருக்க வேண்டும். 20 சதவீதம் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டரை ஏக்கருக்கு, ஒரு விவசாயி வீதம், 25 ஏக்கருக்கு 10 ஆதிதிராவிட விவசாயிகளுக்கும், பெண் விவசாயிகளுக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 15 பெண் விவசாயிகளுக்கும், சிறு குறு விவசாயிகளுக்கு, 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 25 சிறு குறு விவசாயிகளுக்கும் மானியம் வழங்கப்படும்.மா, கொய்யா, முருங்கை நாற்றுகளில், ஒன்று மட்டும் ஒரு விவசாயிக்கு முழு மானியத்தில் வழங்கப்படும். ஊடுபயிர் வகைகளும், தோட்டக்கலை பயிர்களான தக்காளி, மிளகாய் நாற்றுகளும் வழங்கப்படும்.இதோடு, மாடு வாங்குவதற்கு, 15 ஆயிரம் ரூபாயும், ஆடுகள் வாங்க, 7 ஆயிரத்து 500 ரூபாயும் மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், உழவன் செயலியில் பதிவு செய்யலாம் அல்லது தோட்டக்கலை அலுவலர்கள் தாமோதரன் - 96598 38787, பிரபாகரன் - 75388 77132 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X