தமிழ்நாடு

பட்டுப்புழு வளர்ப்பில் சாதனை முதல் பரிசு பெற்றார் விவசாயி

Added : செப் 08, 2021
Share
Advertisement
கிணத்துக்கடவு;பட்டுப்புழு வளர்ப்பில், இரு ஆண்டுகளாக கூடுதல் மகசூல் எடுத்து, சொலவம்பாளையம் விவசாயி கனகராஜ், மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்று வருகிறார்.கிணத்துக்கடவு, சொலவம்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ்,46: இயற்கை விவசாயி. கடந்த, 16 ஆண்டுகளாக, ஒரு ஏக்கர் பரப்பளவில், சொட்டு நீர் பாசனத்தில், மல்பெரி செடி சாகுபடி மேற்கொண்டு, பட்டுக்கூடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.ஒவ்வொரு
 பட்டுப்புழு வளர்ப்பில் சாதனை முதல் பரிசு பெற்றார் விவசாயி

கிணத்துக்கடவு;பட்டுப்புழு வளர்ப்பில், இரு ஆண்டுகளாக கூடுதல் மகசூல் எடுத்து, சொலவம்பாளையம் விவசாயி கனகராஜ், மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்று வருகிறார்.கிணத்துக்கடவு, சொலவம்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ்,46: இயற்கை விவசாயி. கடந்த, 16 ஆண்டுகளாக, ஒரு ஏக்கர் பரப்பளவில், சொட்டு நீர் பாசனத்தில், மல்பெரி செடி சாகுபடி மேற்கொண்டு, பட்டுக்கூடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும், பட்டுவளர்ச்சித்துறை நிர்ணயித்துள்ள அளவுக்கு மகசூல் பெற வேண்டும், என, தீவிரம் காட்டி வருகிறார். கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து, மாவட்ட அளவில் முதல் பரிசை பெற்றுள்ளார்.இவர், 1,200 முட்டைகளில் இருந்து, 1,100 கிலோ பட்டுப்புழுவை அறுவடை செய்து, 93 சதவீதம் ஆதாயம் பெற்றுள்ளார். மாவட்ட அளவில் அதிகளவு ஆதாயம் எடுத்ததற்காக பரிசை பெற்றார்.கடந்த, 2019 - 20ம் ஆண்டுக்கான முதல் பரிசை கலெக்டரிடமும், நடப்பு ஆண்டுக்கான பரிசை, பட்டு வளர்ப்புத்துறை உதவி இயக்குனர் பரூக் அப்துல்லாவிடம் இருந்து, பரிசு தொகையான, 25 ஆயிரம் ரூபாயுடன், சான்றிதழையும் பெற்றார்.புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தோட்ட பராமரிப்பு, புழு வளர்ப்பையும் மேற்கொண்டு, நோய் தாக்குதல் ஏற்படாமல் கண்காணித்தல் ஆகியன, கூடுதல் ஆதாயம் கிடைப்பதற்கு காரணமாகும் என, கூறுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X