பொது செய்தி

தமிழ்நாடு

மண்மேடாக மாறிய நீர் வரத்து பாதைகள் : பருவமழைக்கு முன் தூர்வார எதிர்பார்ப்பு

Added : செப் 08, 2021
Share
Advertisement
உடுமலை:வடகிழக்கு பருவமழைக்கு முன், கிராம குளங்களுக்கான நீர் வரத்து பாதைகளை துார்வார எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், 74 குளங்கள் உள்ளன. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில், குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்கிறது.நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இக்குளங்கள் உள்ளன. நீண்ட காலமாக, துார்வாரப்படாமல்,
 மண்மேடாக மாறிய நீர் வரத்து பாதைகள் : பருவமழைக்கு முன் தூர்வார எதிர்பார்ப்பு

உடுமலை:வடகிழக்கு பருவமழைக்கு முன், கிராம குளங்களுக்கான நீர் வரத்து பாதைகளை துார்வார எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 23 ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில், 74 குளங்கள் உள்ளன. வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை காலங்களில், குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்கிறது.நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இக்குளங்கள் உள்ளன. நீண்ட காலமாக, துார்வாரப்படாமல், குளங்களில், நீர் தேக்கும் கொள்ளளவு வெகுவாக குறைந்திருந்தது.இந்நிலையில், கடந்த, 2019ல், 'ஜல் சக்தி அபியான்' திட்டத்தில், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள, 28 குளங்கள் துார்வாரப்பட்டது; விவசாயிகள் வண்டல் மண் அள்ளிக்கொள்ளும் திட்டத்திலும் சில குளங்களின் நீர் தேக்க கொள்ளளவு அதிகரித்துள்ளது.ஆனால், குளங்களுக்கு கிராம குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் இருந்து, மழைக்காலத்தில், தண்ணீர் வரும் வரத்து பாதைகள் பராமரிக்கப்படாமல் உள்ளது. பல நீர் வரத்து பாதைகள் புதர் மண்டி, மண்மேடாக மாறியுள்ளன.இதனால், குளங்களுக்கு வரும் தண்ணீர் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துகின்றன. உடுமலை சுற்றுப்பகுதியில், தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது.இருப்பினும், குளங்களுக்கு நீர் வரத்து கிடைக்கவில்லை. விரைவில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், குளங்களின் நீர் வரத்து பாதைகளை சிறப்பு திட்டத்தின் கீழ் துார்வார வேண்டும்.இதனால், குளங்களில், அதிகளவு தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X