பொது செய்தி

தமிழ்நாடு

18 மையங்களில் இன்று முகாம் தடுப்பூசி செலுத்த முன்னுரிமை

Added : செப் 08, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், இன்று, 18 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கடை ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களில், கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் தாய்மார்கள், பள்ளி,கல்லுாரி ஆசிரியர்கள், பணியாளர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.மேலும்,

உடுமலை:உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், இன்று, 18 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கடை ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களில், கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் தாய்மார்கள், பள்ளி,கல்லுாரி ஆசிரியர்கள், பணியாளர்கள், கல்லுாரி மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.மேலும், வணிக நிறுவன ஊழியர்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கடைகள், வங்கி உள்ளிட்ட அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.உடுமலை நகராட்சி பழைய அலுவலக கட்டட வளாகத்தில், 800 பேருக்கும், எஸ்.கே.பி., பள்ளியில், 400 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.உடுமலை ஒன்றியத்தில் இன்று, மொடக்குப்பட்டி பள்ளி- 450, தீபாலபட்டி-400, உடுக்கம்பாளையம்-370, விளாமரத்துப்பட்டி-400, சின்னபாப்பனுாத்து-400 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.வாக்காளர் பட்டியல் அடிப்படையில், ஓட்டுசாவடி மையங்களாக உள்ள பள்ளிகளில், இம்முகாம் நடக்கிறது.குடிமங்கலம் ஒன்றியத்தில், வி.வேலுார் பள்ளி-200, சலவநாயக்கன்பட்டி-200, சிந்திலுப்பு-100, அரசூர்-230, மொகவனுார்-230 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.மடத்துக்குளம் ஒன்றியத்தில், கடத்துார் தொடக்கப்பள்ளி-400, வேடபட்டி-300, வடக்கு கண்ணாடிபுத்துார்-300 பேருக்கு செலுத்தப்படுகிறது. கணியூர் முதன்மை ஆரம்ப சுகாதார நிலையம் வாயிலாக, குருவக்குளம் மதகடிபுதுார் பள்ளி-300, பெருமாள்புதுார் பள்ளி-300, காரத்தொழுவு-500 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X