தமிழ்நாடு

தேசிய புத்தக கண்காட்சி துவக்கம்: பல் துறை நூல்கள் அணிவகுப்பு

Added : செப் 08, 2021
Share
Advertisement
உடுமலை;உடுமலையில், 36வது தேசிய புத்தகக்கண்காட்சி நேற்று துவங்கியது. வரும், 16ம் தேதி வரை நடக்கிறது.நேஷனல் புக் டிரஸ்ட், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், உடுமலை தொழில் வர்த்தக சபை, அரசு கலைக்கல்லுாரி முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை மற்றும் ரோட்டரி, இன்னர்வீல் சங்கங்கள் சார்பில், 36வது தேசிய புத்தகக்கண்காட்சி, உடுமலை கல்பனா ரோடு, சண்முகப்பிரியா காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நேற்று
 தேசிய புத்தக கண்காட்சி துவக்கம்: பல் துறை நூல்கள் அணிவகுப்பு

உடுமலை;உடுமலையில், 36வது தேசிய புத்தகக்கண்காட்சி நேற்று துவங்கியது. வரும், 16ம் தேதி வரை நடக்கிறது.நேஷனல் புக் டிரஸ்ட், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், உடுமலை தொழில் வர்த்தக சபை, அரசு கலைக்கல்லுாரி முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை மற்றும் ரோட்டரி, இன்னர்வீல் சங்கங்கள் சார்பில், 36வது தேசிய புத்தகக்கண்காட்சி, உடுமலை கல்பனா ரோடு, சண்முகப்பிரியா காம்ப்ளக்ஸ் வளாகத்தில் நேற்று துவங்கியது.உடுமலை தொழில் வர்த்தக சபை தலைவர் அருண்கார்த்திக் தலைமை வகித்தார். பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், புத்தகக்கண்காட்சியை திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.இக்கண்காட்சியில், வரலாறு, அரசியல், சமூகவியல், ஆன்மிகம், மருத்துவம், அறிவியல், ஆங்கிலம், தமிழ் இலக்கியம், சிறுவர்களுக்கான நுால்கள் என பல்வேறு துறை சார்ந்து, பல ஆயிரக்கணக்கான நுால்கள் இடம் பெற்றுள்ளன.வரும், 16ம் தேதி வரை, தினமும் காலை, 9:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை நடக்கிறது. 10 முதல் 25 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.முகக்கவசம், தனி மனித இடைவெளி என கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் இக்கண்காட்சியில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X