பொது செய்தி

தமிழ்நாடு

பெற்றோருக்கும் தடுப்பூசி கட்டாயம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

Added : செப் 08, 2021
Share
Advertisement
மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, பெற்றோர் தடுப்பூசி போட்டுள்ளதை உறுதி செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் இம்மாத துவக்கத்தில் இருந்து, ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நடக்கின்றன. பள்ளி திறந்த சில தினங்களிலேயே கோவை மாவட்டத்தில், மாணவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று

மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, பெற்றோர் தடுப்பூசி போட்டுள்ளதை உறுதி செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் இம்மாத துவக்கத்தில் இருந்து, ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, நேரடி வகுப்புகள் நடக்கின்றன. பள்ளி திறந்த சில தினங்களிலேயே கோவை மாவட்டத்தில், மாணவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், பள்ளிக்குள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த செயல்முறைகள் மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, சமூக இடைவெளி பின்பற்றுவதோடு, அதிக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் சுழற்சி முறை வகுப்புகளை பின்பற்ற வேண்டும், தினமும் உடல்வெப்பநிலை சரிபார்ப்பதோடு, சளி, இருமல் அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறியதாவது:கோவை மாவட்டத்தில், 646 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் தற்போது செயல்படுகின்றன.
தடுப்பூசி போட்ட ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மட்டுமே, தற்போது பள்ளிக்கு வருகை புரிகின்றனர். பள்ளி வளாகத்தில் இருப்போரால், தொற்று பரவும் வாய்ப்புகள் குறைவு.எனவே, மாணவர்களின் பெற்றோரும் தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை உறுதி செய்யுமாறு தெரிவித்துள்ளேன். தடுப்பூசி போடாதவர்களை விரைவில் செலுத்திக் கொள்ள வலியுறுத்த வேண்டுமென, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதனால், தொற்று பரவுவதை கட்டுக்குள் கொண்டு வர முடியும். பள்ளிக்குள் பின்பற்றும் நடைமுறைகளை, அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X