பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு... ஆறு மாசமாச்சு! அறிவிப்பு பலகையோடு அமைதியான அதிகாரிகள்

Added : செப் 08, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு, 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஆறு மாதத்திற்கு முன் பூமி பூஜை நடந்தும், பணிகள் துவங்குவதில் இழுபறியாகி வருகிறது.கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை பஸ் ஸ்டாண்ட், 1964ல் கட்டப்பட்டது. அதற்கு பிறகு, 1996ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. உடுமலை சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, டவுன் பஸ்களும், மதுரை, கோவை, திண்டுக்கல், பழநி என
பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டு... ஆறு மாசமாச்சு! அறிவிப்பு பலகையோடு அமைதியான அதிகாரிகள்

உடுமலை:உடுமலை பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்கு, 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஆறு மாதத்திற்கு முன் பூமி பூஜை நடந்தும், பணிகள் துவங்குவதில் இழுபறியாகி வருகிறது.கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை பஸ் ஸ்டாண்ட், 1964ல் கட்டப்பட்டது. அதற்கு பிறகு, 1996ல் விரிவாக்கம் செய்யப்பட்டது. உடுமலை சுற்றுப்புற கிராமங்களிலிருந்து, டவுன் பஸ்களும், மதுரை, கோவை, திண்டுக்கல், பழநி என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், 300க்கும் மேற்பட்ட பஸ்களும் இயக்கப்படுகிறது.தினமும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். உடுமலை பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் நிற்பதற்கான 'ரேக்' வசதிகள் மற்றும் பயணிகள் காத்திருப்பதற்கான வசதி, குடிநீர், கழிப்பிடம் என அடிப்படை வசதிகள் இல்லை.அதிகரித்து வரும் பஸ்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, போதிய வசதியில்லாத, இந்த பஸ் ஸ்டாண்டை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது.இதற்காக, 13 ஆண்டுக்கு முன், வி.பி., புரத்திலிருந்த, 420 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்யும் திட்டம் இழுபறியாகி வந்தது.கடந்தாண்டு, நகராட்சி நுாற்றாண்டு விழானை முன்னிட்டு, சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது. இதில், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கத்திற்காக, 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டது.ஆறு மாதத்திற்கு முன், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க பணிகளுக்காக, பூமி பூஜை நடந்தது. அப்பகுதியில், டெண்டர் தொகையுடன் கூடிய பணிகள் துவக்குவதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.ஆனால், ஆறு மாதமாகியும் பணிகள் துவக்காமல் இழுபறியாகி வருகிறது. தற்போது, வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும், தனியார் ஆக்கிரமிப்புகளிலும், சமூக விரோத செயல்கள் நடக்கும் மையமாகவும் மாறியுள்ளது.மறுபுறம், உடுமலை பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிற்க வழியில்லாமலும், பயணிகள், மழையிலும், வெயிலிலும் காத்திருக்கும் அவல நிலை உள்ளது. எனவே, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிகளை உடனடியாக துவக்கி, விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதிகாரிகள் கூறுகையில், 'ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பணிகள் துவங்கவில்லை; விரைவில் துவக்கப்படும்,' என்றனர்.கவனம் தேவை!உடுமலை பஸ் ஸ்டாண்ட் மேம்பாட்டுக்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல், கழிப்பிடம் அமைத்தல், இருக்கைகள் மற்றும் மின்விசிறிகள் அமைத்தல், நடைபாதை உட்பட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதில், நடைபாதை பயன்பாட்டில் இல்லாமல், காட்சிப்பொருளாக உள்ளது. எனவே, விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப்பணிகளில், அதிகாரிகள் குழுவினர் கூடுதல் கவனம் செலுத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X