பொது செய்தி

தமிழ்நாடு

காஞ்சிபுரம் பட்டு பூங்கா திறப்பு... 66 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு  18 ஆயிரம் பேருக்கு வேலை இருக்கு

Added : செப் 08, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : நாட்டில் முதல் முறையாக, கைத்தறிக்கு என பிரத்யேக பட்டு பூங்கா, வரும் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் திறக்கப்பட உள்ளது. 75 ஏக்கர் பரப்பளவில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 18 ஆயிரம் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதில் 66 சதவீதம், பெண்கள் ஈடுபட உள்ளனர்.மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில், 2009ம் ஆண்டு, பட்டு பூங்கா திட்டம் அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து,
காஞ்சிபுரம் பட்டு பூங்கா திறப்பு... 66 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு  18 ஆயிரம் பேருக்கு வேலை இருக்கு

காஞ்சிபுரம் : நாட்டில் முதல் முறையாக, கைத்தறிக்கு என பிரத்யேக பட்டு பூங்கா, வரும் 15ம் தேதி காஞ்சிபுரத்தில் திறக்கப்பட உள்ளது.

75 ஏக்கர் பரப்பளவில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 18 ஆயிரம் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதில் 66 சதவீதம், பெண்கள் ஈடுபட உள்ளனர்.மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில், 2009ம் ஆண்டு, பட்டு பூங்கா திட்டம் அறிவிக்கப்பட்டது.தொடர்ந்து, 2012ல் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்க்கதிர்பூர் கிராமத்தில், 75 ஏக்கர் அரசு நிலத்தில், 'பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டுப் பூங்கா' என்ற பெயரில் பட்டுப்பூங்கா அமைக்கப்படும் என, அரசு அறிவித்தது.இதற்கு திட்ட மதிப்பீடான, 83.83 கோடி ரூபாயில், 9 சதவீத தொகையான, 7.54 கோடி ரூபாயை மானியமாக, தமிழக அரசு வழங்குவதாகவும், 14 கோடி ரூபாய் மதிப்புடைய, 75 ஏக்கர் அரசு நிலத்தை வழங்குவதாகவும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

மற்ற தொகையை தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன.மேலும், 'பட்டு சேலைகள் உற்பத்தி செய்வதற்கானஅனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் நேரடியாகவும்,மறைமுகமாகவும், 10 ஆயிரம் பட்டு, பருத்தி நெசவாளர்கள் பயன்பெறுவர்' என தெரிவித்தார்.ஆனால், அடுத்தடுத்த ஆண்டுகளில் இதற்கான பணிகள் முடங்கின. மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகள் மூலம் கிடைக்க வேண்டிய தடையின்மை சான்றுகள் பெறுவதற்கு தாமதம் ஆகின. மேலும், சாயப்பட்டறை உரிமையாளர்கள் லட்சக்கணக்கான ரூபாய் முதலீடு செய்துவிட்டு காத்திருந்தனர்.

கடந்த ஆண்டு காஞ்சிபுரம் வந்த முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., 25 சதவீத பணிகள் மட்டுமே பட்டு பூங்காவில் பணிகள்நடைபெற்றதாகவும், விரைவில் பூங்கா பணிகள் நடைபெறும் எனவும் தெரிவித்தார். ஆனால், பணிகள் பெரிதாக நடக்கவில்லை.இந்நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, ஜூன் மாதம் காஞ்சிபுரம் வந்து, பட்டு பூங்காவை பார்வையிட்டார்.அப்போது, முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான, செப்., 15ல், பட்டு பூங்கா செயல்படும் என, தெரிவித்தார்.அதற்கேற்றாற்போல், அன்றைய தினம் பட்டு பூங்காவை திறப்பதற்கான அனைத்து பணிகளும் விறுவிறுப்பாக நடக்கின்றன.35 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில், தறியில் நெய்வது ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. கைத்தறி நெசவு மொத்த பணியில், 66 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது.

அதாவது மூன்றில் இரு பங்கு பெண்களுக்கு பணி வழங்கப்பட உள்ளது. பெண்கள் எளிமையாக தறி நெய்ய, தறியில் மோட்டார் இணைக்கப்பட்டுள்ளது.பி.எப்.-, - இ.எஸ்.ஐ., வசதிபட்டுப்பூங்காவில் தறி நெய்து கொடுக்கும் வேலை மட்டும் தான். சம்பளம், தொழில் உத்தரவாதம் உள்ளது. சாய தொழிற்சாலை மூலம் நிலத்தடி நீர் மாசடைவது முற்றிலும் தடுக்கப்படும். பயிற்சி மையம், வடிவமைப்பு 'ஸ்டூடியோ' போன்ற பணிகளும் நடக்க உள்ளன. பட்டு பூங்கா முழு வீச்சில் செயல்பட துவங்கினால், காஞ்சிபுரம் நெசவாளர்களின் வாழ்வாதாரம் அடுத்தக்கட்ட நிலைக்கு செல்லும். நெசவாளர்கள், பணியாளர்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதி - பி.எப்.-, மற்றும் இ.எஸ்.ஐ., போன்றவை வழங்கப்பட உள்ளது.டி.சுந்தர் கணேஷ், தலைவர் அண்ணா பட்டு கைத்தறி பூங்காமுன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளில் பூங்கா திறக்கப்பட உள்ளது. அன்று, முதல்வர் வருவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. கைத்தறி துறை அமைச்சர் வருகிறார். கைத்தறி பணிகள் முதற்கட்டமாக துவங்கியுள்ளது. மற்ற ஷெட் அமைந்து, முழுவீச்சில் செயல்பட ஓராண்டாகும்.மா.ஆர்த்தி,கலெக்டர், காஞ்சிபுரம்நாட்டில் முதல் முறைஇந்தியாவில் உள்ள ஜவுளி பூங்காக்களில், பட்டு கைத்தறி நெசவுக்கு என பிரத்யேகமான பூங்கா எங்கும் அமையவில்லை. நாட்டிலேயே முதன் முறையாக, பட்டு கைத்தறிக்கு என, காஞ்சிபுரத்தில் கைத்தறி பூங்கா அமைய உள்ளது.

காஞ்சிபுரத்தில் அமையும் இந்த தொழிற்சாலை மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும், 18 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க உள்ளது.'ஷெட்'கள் விபரம்பட்டு கைத்தறி ஷெட் 2496 தறிகள் உடைய ஷெட் 2224 தறிகள் ஷெட் உடைய 2பட்டு சாயமிடும் தொழிற்சாலைகள் 16பருத்தி நுால் சாய தொழிற்சாலைகள் 30மொத்த கைத்தறிகள் 2,160பாவு நீட்டுதல் பணிக்கு 9 ஷெட்'எம்ப்ராய்ட்ரி' மற்றும் பிற வேலைகள் 3 ஷெட்பட்டு நெசவு மட்டுமே இப்பூங்காவில் இடம் பெற உள்ளது; பருத்தி நெசவு இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X