நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு 

Added : செப் 08, 2021
Share
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வாக்கூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறந்து விவசாயிகளிடம் கொள்முதல் துவக்க நிகழ்ச்சி நடந்தது.கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஓடாக்கநல்லுார், வடப்பாக்கம், பூந்தோட்டம், வாக்கூர், ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வாக்கூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறந்து விவசாயிகளிடம் கொள்முதல் துவக்க நிகழ்ச்சி நடந்தது.கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட ஓடாக்கநல்லுார், வடப்பாக்கம், பூந்தோட்டம், வாக்கூர், ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட நிர்வாகம் வாக்கூரில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் திறந்தனர். தொழிலதிபர் கனகசபை, தி.மு.க., ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கி நெல்கொள்முதலை துவக்கி வைத்தனர். ஊராட்சித் தலைவர் சிவனேசன், துணைத்தலைவர் வெற்றிவேல், விவசாயிகள் சரவணன், தெய்வநாயகம், புவியரசு, குமார், தனசேகரன், சிங்காரவேல் உட்பட பலர் பங்கேற்றனர். பருவ கால பட்டியல் எழுத்தர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X