விவசாயிகள் பேரணி; ஹரியானாவில் பதற்றம்

Updated : செப் 08, 2021 | Added : செப் 08, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
கர்னால் : ஹரியானா மாநிலம் கர்னாலில் மாவட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் பேரணியாக சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. போராட்டம்ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் விவசாய அமைப்புகளை

கர்னால் : ஹரியானா மாநிலம் கர்னாலில் மாவட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் பேரணியாக சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


போராட்டம்ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒன்பது மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கர்னாலில் சமீபத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆலோசனை கூட்டம் நடந்தது. முதல்வரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.latest tamil newsஇதையடுத்து தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி பேரணியாக வந்த விவசாயிகளை தடியடி நடத்தி போலீசார் விரட்டி அடித்தனர். இந்நிலையில் 'விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து கர்னாலில் மஹா பஞ்சாயத்து கூட்டம் நடத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, விவசாய அமைப்புகள் நேற்று அறிவித்திருந்தன.பேச்சு தோல்விஇதையடுத்து கர்னாலில் விவசாயிகள் நேற்று அதிகளவில் குவிந்தனர். பிரச்னைக்கு தீர்வு காண விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சு தோல்வியடைந்தது.


latest tamil newsஇதையடுத்து கலெக்டர் அலுவலகம் நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.தலைமை நீதிபதிக்கு கடிதம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று விவசாய சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மூன்று பேர் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றம் ஜனவரியில் நியமித்தது. இந்த குழு விவசாய சட்டங்கள் பற்றி பல்வேறு விவசாய அமைப்புகள், விவசாயிகள், மாநில அரசுகள் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி, அறிக்கையை மார்ச்சில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இந்நிலையில் நிபுணர் குழுவில் இடம் பெற்றிருந்த அனில்கன்வட், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ' நாங்கள் சமர்ப்பித்த அறிக்கைக்கு உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் அளிப்பதாக தெரியவில்லை. அறிக்கை விபரங்களை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
08-செப்-202112:34:00 IST Report Abuse
sankaseshan விவசாயிகள் நிலத்தில் பாடுபட்டு உற்பத்தியை பெறுக்குகின்றனர் தரகு செய்யிது கொள்ளைஅடிப்பவர்கள் போராட்டம் பண்ணுறாங்க
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
08-செப்-202108:27:02 IST Report Abuse
தமிழன் ஒலகத்துலேயே விவசாயி மாசகணக்குல போராட்டம் பண்றது, ஹெலிகாப்டர்ல மலர் தூவி போராட்டம் பண்றவன வரவேற்பது, நடு ரோட்டுல டிராக்டற கவுக்குறது, டிராக்டர்ல hi-fi stereo போட்டு கரி விருந்து திங்குறது, hi கார்ல உலா வந்து போராட்டம் பண்றது, வெளிநாட்டான் உதவியோட அடுத்த போராட்டத்துக்கு பிளான் போடறது, இவனுகளுக்கு வக்காலத்து வங்குறது.. எல்லாமே நம்ம ஜனநாயக நாட்ல மட்டுந்தான் நடக்கும்.
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
08-செப்-202111:34:36 IST Report Abuse
Rajஉலகத்திலேயே நம்ம ஜனநாயக நாட்ல மட்டுந்தான் இவ்வளவு மோசமான ஆட்சி நடக்குது...
Rate this:
Cancel
08-செப்-202107:04:20 IST Report Abuse
ராஜா குறைந்தது இரண்டு போகம் அறுவடையாவது முடிந்திருக்கும். இவர்கள் யாரும் அதற்கு சென்றதாக தெரியவில்லை. அப்படி என்றால் இவர்களிடம் போதுமான பணம் உள்ளது. பயிரே வைக்காதவர்கள் எப்படி விவசாயிகள் ஆவார்கள். அடித்து விரட்டுவது உண்மையான விவசாயத்தை நேசிக்கும் விவசாயிகளுக்கு நல்லது. உண்மையில் விவசாயிகள் போராட வேண்டியது 100 நாள் வேலைத்திட்டத்தையும், சேரி வளர்ப்பையும் எதிர்த்து. காரணம் அதனால் தான் போதுமான கூலி தொழிலாளர்கள் கிடைப்பது இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X