பொது செய்தி

தமிழ்நாடு

ஜூலை முதல் அகவிலைப்படி வழங்க தமிழக அரசு அறிவிப்பு

Added : செப் 08, 2021
Share
Advertisement
கடலுார் : அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதலே அகவிலைப்படி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அவர் அளித்த பேட்டி: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏப்.,2022 முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனை, மறுபரிசீலனை செய்ய, பணியாளர் சங்கம் வலியுறுத்தியது. இதையடுத்து 2022 ஜனவரி முதல்

கடலுார் : அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதலே அகவிலைப்படி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏப்.,2022 முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனை, மறுபரிசீலனை செய்ய, பணியாளர் சங்கம் வலியுறுத்தியது. இதையடுத்து 2022 ஜனவரி முதல் அகவிலைப்படி வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மத்திய அரசு 1---7--2௦21 முதல் அகவிலைப்படியை மத்திய அரசு பணியாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இதனை பின்பற்றி தமிழக அரசும் 1--7--௨௦21 முதலே அகவிலைப்படி அறிவிக்க வேண்டும். தொகுப்பூதியம் முதல் குறைந்தபட்ச ஊதியம் பெறுவோருக்கு ஒரே தொகையாக அகவிலைப்படி வழங்க முதல்வர் முன்வர வேண்டும். அரசு பணியாளர்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (8 ம் தேதி) கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. அரசுப் பணியாளர்கள் கோரிக்கைகள் குறித்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். பல்வேறு துறைகளிலும் தற்காலிக அடிப்படையில் பணிபுரிபவர்கள் வேலையிலிருந்து நிறுத்தப்பட்டு, வேறொருவர் நியமிக்கப்படுகின்றனர். இது போல் கடலுார் நகராட்சியில் 56 டெங்கு பணியாளர்கள் பாதித்துள்ளனர். அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X