சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாயை கல்லால் அடித்த தகராறு

Added : செப் 08, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே நாயை, கல்லால் அடித்த தகராறில், 3 பேர் படுகாயமடைந்தனர். நான்கு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் புதுப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் தெருவை சேர்ந்தவர் நெப்போலியன், 46; அவரது மகன் விஷ்வா,20; இருவரும் நேற்று முன்தினம் வெள்ளாற்றில், மீன் பிடித்து விட்டு, வீட்டிற்கு நடந்து வந்தனர்அப்போது, அதே பகுதியை சேர்ந்த பாவாடை

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே நாயை, கல்லால் அடித்த தகராறில், 3 பேர் படுகாயமடைந்தனர். நான்கு பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் புதுப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் தெருவை சேர்ந்தவர் நெப்போலியன், 46; அவரது மகன் விஷ்வா,20; இருவரும் நேற்று முன்தினம் வெள்ளாற்றில், மீன் பிடித்து விட்டு, வீட்டிற்கு நடந்து வந்தனர்அப்போது, அதே பகுதியை சேர்ந்த பாவாடை என்பவருடைய நாய் கடிக்க வந்ததால், விஷ்வா நாயை, கல்லால் அடித்துள்ளார். நாயை, ஏன் கல்லால் அடிக்கிறாய் என பாவாடை கேட்டதால், தகராறு ஏற்பட்டு மோதிக்கொண்டனர்.இந்த மோதலில், நெப்போலியன், அவரது மனைவி சங்கீதா, 31; பாவாடை, 50; புஷ்பராஜ், 22; ஆகியோர் காயமடைந்து, பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் காமராஜ் வழக்குப் பதிந்து பாவாடை, நெப்போலியன், விஷ்வா, வினோத் ஆகிய நான்கு பேரை தேடிவருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X