சில வரி செய்திகள்

Added : செப் 08, 2021
Share
Advertisement
பாலாபிஷேகம்திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய்கிழமை என்பதால், மூலவருக்கு காலை, 8:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மதியம், 12:00 மணிக்கு, உச்சிகால பூஜையும், மாலை, 3:00- மணி முதல், 4:30 மணி வரை ராகுகால பூஜையும் நடந்தது. அப்போது, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில்

பாலாபிஷேகம்திருத்தணி: திருத்தணி அடுத்த, மத்துார், மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய்கிழமை என்பதால், மூலவருக்கு காலை, 8:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.மதியம், 12:00 மணிக்கு,

உச்சிகால பூஜையும், மாலை, 3:00- மணி முதல், 4:30 மணி வரை ராகுகால பூஜையும் நடந்தது. அப்போது, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.இதே போல், நகரி டி.ஆர்.கண்டிகையில் உள்ள தேசம்மன் கோவிலிலும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது.

காலை முதல், மாலை வரை தொடர்ந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.மண்டலாபிஷேகம்திருத்தணி: திருத்தணி ஒன்றியம், மாம்பாக்கசத்திரம் விநாயகர் கோவிலை புதுப்பித்து, கடந்த மாதம், 27ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.இதையடுத்து, 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் தினசரி நடந்து வருகின்றன.

அந்த வகையில், நேற்று நடந்த மண்டலாபிஷேக விழாவில், காலையில், 8:00 மணிக்கு யாகசாலை பூஜையும், தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X