பொது செய்தி

தமிழ்நாடு

வட்டியில்லா கடன் வழங்கக் கோரி

Added : செப் 08, 2021
Share
Advertisement
கடலுார் : தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, சாலையோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க கோரி, கடலுாரில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.விடுபட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், புதுப்பித்து தர வேண்டும், தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி கூட்டுறவு வங்கி மூலம் ரூ. 15 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். பிரதமரின் மத்திய அரசு

கடலுார் : தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, சாலையோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க கோரி, கடலுாரில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.விடுபட்ட சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், புதுப்பித்து தர வேண்டும்,

தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி கூட்டுறவு வங்கி மூலம் ரூ. 15 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். பிரதமரின் மத்திய அரசு திட்டத்தின்படி சாலையோர அனைத்து வியாபாரிகளுக்கு ரூ. 10 ஆயிரம் நிபந்தனையின்றி வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார் மாவட்ட சாலையோர சிறுகடை தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யூ.,) சார்பில், கடலுார் நகராட்சி அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. நகர தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யூ., மாவட்ட தலைவர் பழனிவேல், இணை செயலாளர் சுப்ராயன், துணைத் தலைவர் ஆளவந்தார். இணை செயலாளர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சிதம்பரம் சிதம்பரத்தில் நகராட்சி கமிஷனரிடம், சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் உதயகுமார் தலைமையில் அளித்த மனுவில், சிதம்பரம் பகுதியில் பதியாத சாலையோர வியாபாரிகளுக்கு புதிய அடையாள அட்டையும், பதிந்த வியாபாரிகளுக்கு அடையாள அட்டையை புதுப்பித்து தர வேண்டும், என கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X