பொது செய்தி

தமிழ்நாடு

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கூட்டுறவு பட்டய பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கடலுார் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடலுார் டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2021-2022 ம் ஆண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி

கடலுார் : கடலுார் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், கூட்டுறவு பட்டய பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கடலுார் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடலுார் டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2021-2022 ம் ஆண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி அளிக்கப்படுகிறது.

கூட்டுறவு மேலாண்மை, கம்ப்யூட்டர் மேலாண்மை மற்றும் நகை மதிப்பீடும் அதன் தொழில்நுட்பங்களும் ஆகிய மூன்று சான்றிதழ்களுடன் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. விண்ணப்பங்கள் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் www.tncu.tn.gov.in என்ற இணைய தள முகவரியில் வரும் 15ம் தேதி மாலை 5:30 மணிக்குள் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, கூரியர் அல்லது பதிவு தபால் மூலமாக மட்டுமே டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த ஆண், பெண் இரு பாலரும் சேரலாம். (பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ) முடித்தவர்களும் சேரலாம். 9 மாத பயிற்சி காலம், கட்டணம் ரூ. 14 ஆயிரத்து 850 ஆகும்.

மேலும் விபரங்களுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர்., கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண் 3, கடற்கரை சாலை, சரவண பவ சூப்பர் மார்க்கெட் வளாகம், கடலுார்-607 001. என்ற முகவரியிலோ அல்லது 04142 222619 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X