தமிழ்நாடு

ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு

Added : செப் 08, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நிமிடத்திற்கு, 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் திறக்கப்பட்டது.திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா, பெருந்தொற்றின் 3-வது அலையை எதிர்கொள்ள, 310 படுக்கை வசதி மேம்படுத்தப்பட்டு உள்ளது.இதில், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 110
ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நிமிடத்திற்கு, 1,000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையம் திறக்கப்பட்டது.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா, பெருந்தொற்றின் 3-வது அலையை எதிர்கொள்ள, 310 படுக்கை வசதி மேம்படுத்தப்பட்டு உள்ளது.இதில், குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 110 படுக்கைகள் தயாராக உள்ளது.இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி மையம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இதன் வாயிலாக, நிமிடத்திற்கு, 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு, 200 படுக்கைகளுக்கு, ஆக்சிஜன் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில், மத்திய அரசு உதவியோடு, 2 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஆக்சிஜன் உற்பத்தி மையம் நிறுவப்பட்டு உள்ளது.நிமிடத்திற்கு, 1,000 லிட்டர், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்தவை. இதன் மூலம் சுமார் 300 படுக்கைகளுக்கு தங்கு தடையின்றி கிடைக்கும்.இதை கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்து, பார்வையிட்டார். நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர், மருத்துவர் அரசி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X