மாட்டு வண்டி தொழிலாளர்கள் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாட்டு வண்டி தொழிலாளர்கள்

Added : செப் 08, 2021
Share
சிதம்பரம் : மணல் குவாரி திறக்க வேண்டுமென மாட்டுவண்டி தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம், புவனகிரி வட்டத்திலுள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு, கிளியனுார், ஆதனுார், அம்புஜவல்லிபேட்டை, கூடலையாத்துார் ஆகிய ஏதேனும் ஒரு பகுதியில் மாட்டு வண்டி மணல் குவாரி அமைத்து தரவேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர்

சிதம்பரம் : மணல் குவாரி திறக்க வேண்டுமென மாட்டுவண்டி தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம், புவனகிரி வட்டத்திலுள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு, கிளியனுார், ஆதனுார், அம்புஜவல்லிபேட்டை, கூடலையாத்துார் ஆகிய ஏதேனும் ஒரு பகுதியில் மாட்டு வண்டி மணல் குவாரி அமைத்து தரவேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் நேற்று காலை சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் திருமுருகன் தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர் கருப்பையன் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணை தலைவர் சங்கமேஸ்வரன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜமாணிக்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X