பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளி பட்டாசு கடை நடத்த விண்ணப்பிக்கலாம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
கடலுார் : தீபாவளியையொட்டி தற்காலிக பட்டாசுக்கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:தீபாவளி பண்டிகை வரும் நவ., 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் அரசு விதிகளை கடைபிடித்து இணையதளம் அல்லது இ-சேவை மையம் மூலம் வரும் 30ம் தேதி மாலை 5.45

கடலுார் : தீபாவளியையொட்டி தற்காலிக பட்டாசுக்கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:தீபாவளி பண்டிகை வரும் நவ., 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க உரிமம் பெற விரும்புவோர் அரசு விதிகளை கடைபிடித்து இணையதளம் அல்லது இ-சேவை மையம் மூலம் வரும் 30ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பம் செய்வோர் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து, பாதுகாப்பான இடமாக தேர்வு செய்து ஆட்சேபனை இல்லாத இடத்திற்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முந்தைய காலங்களில் தற்போது தேர்ந்தெடுத்துள்ள இடத்தில் கடை வைக்க உரிமம் பெற்றவர்கள் உரிம நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் போது கடையின் வரைபடம் 6, இடத்தின் உரிமையாளராக இருப்பின் அதற்கான பத்திர நகல் (அசல் மற்றும் 5 நகல்), வாடகை கட்டடம் எனில், கட்டட உரிமையாளரிடம் ரூ.20க்கான முத்திரைதாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்த பத்திரம், ரூ.500க்கான கருவூல அசல் நகல், வீட்டு முகவரிக்கான ஆதாரம் (ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பான் கார்டு) நடப்பு நிதியாண்டின் வீட்டு வரி செலுத்திய ரசீது, மனுதாரரின் பாஸ்போர்ட் அளவுள்ள கலர் போட்டோ- 2 இணைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X