சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்தோனேஷியா கப்பலின் மாலுமி உட்பட மூவர் கைது

Added : செப் 08, 2021
Share
Advertisement
மீஞ்சூர் : எண்ணுார் துறைமுகத்தில் இருந்து, குடியுரிமை அதிகாரிகளின் அனுமதி பெறாமல், வெளியில் சென்று திரும்பிய, இந்தோனேஷியாவைச் சேர்ந்த கப்பல் மாலுமி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.இந்தோனேஷியாவை சேர்ந்த எம்.டி., ஏசியன் கிரேஸ் என்ற கெமிக்கல் கப்பல், கடந்த, 3ம் தேதி, எண்ணுார் காமராஜர் துறைமுகத்திற்கு வந்தது. அதில் பொறியாளராக பணியாற்றி வருபவர் முகமது ஜியேனில்

மீஞ்சூர் : எண்ணுார் துறைமுகத்தில் இருந்து, குடியுரிமை அதிகாரிகளின் அனுமதி பெறாமல், வெளியில் சென்று திரும்பிய, இந்தோனேஷியாவைச் சேர்ந்த கப்பல் மாலுமி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தோனேஷியாவை சேர்ந்த எம்.டி., ஏசியன் கிரேஸ் என்ற கெமிக்கல் கப்பல், கடந்த, 3ம் தேதி, எண்ணுார் காமராஜர் துறைமுகத்திற்கு வந்தது. அதில் பொறியாளராக பணியாற்றி வருபவர் முகமது ஜியேனில் ஆர்பின், 38.அவருக்கும், சக பயணி ஒருவருக்கும், சண்டை ஏற்பட்டதில், முகமது ஜியேனில் ஆர்பின் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.அதிகாலை, 5:30 மணிக்கு காமராஜர் துறைமுகத்தில் இருந்து, அங்குள்ள குடியுரிமை அதிகாரிகளின் அனுமதியின்றி வெளியில் சென்றுள்ளார்.

சென்னை மணலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மீண்டும் எண்ணுார் துறைமுகத்திற்கு வந்தபோது, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பிடித்து, குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.இது தொடர்பாக குடியுரிமை அதிகாரிகள், மீஞ்சூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்படி, மேற்கண்ட கப்பலின் மாலுமி லீவாங்மின், 37, பொறியாளர் முகமது ஜியேனில் ஆர்பின், 38, தனியார் கப்பல் நிறுவன மேலாளரான, சென்னையைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், 37, ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மூன்று பேரையும், கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X