பொது செய்தி

இந்தியா

ஊக்குவிப்பு தொகை பெற விண்ணப்பம் வழங்கல்

Added : செப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் விதவையர் வாரிசுகள் ஊக்குவிப்புத் தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.இது குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடந்த 2020-2ல் 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி/ சி.பி.எஸ்.இ.,) மற்றும் பிளஸ் 2 (ஸ்டேட்போர்டு/ சி.பி.எஸ்.இ.,) பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற, முன்னாள் ராணுவ வீரர்களின்

புதுச்சேரி : முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் விதவையர் வாரிசுகள் ஊக்குவிப்புத் தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இது குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கடந்த 2020-2ல் 10ம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி/ சி.பி.எஸ்.இ.,) மற்றும் பிளஸ் 2 (ஸ்டேட்போர்டு/ சி.பி.எஸ்.இ.,) பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற, முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட உள்ளது. இதில், முதல் மூன்று மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்கப்படும்.கல்லுாரி படிப்பில் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

தேசிய, உலகளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ரொக்க வெகுமதி வழங்கப்பட உள்ளது.இதற்கு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த தகுதி உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் விதவையர் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பத்தை முப்படை நலத் துறையில் வரும் 13ம் தேதி முதல் அக்., 8ம் தேதி வரை அலுவலக நாட்களில் பெற்றுக் கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை முப்படை நலத் துறையில் வழங்க வேண்டிய கடைசி நாள் அக்., 22ம் தேதி ஆகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X