இந்தியா

இயற்கையை பாதுகாக்க மாணவர்கள் உறுதியேற்க வேண்டும்: கவர்னர்

Added : செப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : 'இயற்கையை பாதுகாக்க மாணவர்கள் உறுதி யேற்க வேண்டும்' என கவர்னர் தமிழிசை பேசினார்.லாஸ்பேட்டை, தாகூர் அரசு கல்லுாரியில் கொரோனா நினைவு தோட்டம் மற்றும் திறந்தவெளி வகுப்பறை துவக்க விழா நேற்று நடந்தது.நிகழ்ச்சியை, கவர்னர் தமிழிசை மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். கல்லுாரியின் பசுமை சூழல், நாகலிங்க மரம், பட்டாம்பூச்சி தோட்டம், மாணவர்கள் வரைந்த ஓவியங்களை
 இயற்கையை பாதுகாக்க மாணவர்கள் உறுதியேற்க வேண்டும்: கவர்னர்

புதுச்சேரி : 'இயற்கையை பாதுகாக்க மாணவர்கள் உறுதி யேற்க வேண்டும்' என கவர்னர் தமிழிசை பேசினார்.லாஸ்பேட்டை, தாகூர் அரசு கல்லுாரியில் கொரோனா நினைவு தோட்டம் மற்றும் திறந்தவெளி வகுப்பறை துவக்க விழா நேற்று நடந்தது.

நிகழ்ச்சியை, கவர்னர் தமிழிசை மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார். கல்லுாரியின் பசுமை சூழல், நாகலிங்க மரம், பட்டாம்பூச்சி தோட்டம், மாணவர்கள் வரைந்த ஓவியங்களை பார்வையிட்டார். பின்னர் திறந்தவெளி வகுப்பறையை திறந்து வைத்து, அவர் பேசியதாவது:இயற்கையையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் வகையில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டு பாதுகாக்க வேண்டும். மரங்கள் நமக்குத் தேவையான ஆக்சிஜனை தருகிறது. அனைவருக்கும் பயன்படும் மரங்களை நட வேண்டும்.நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி பசுமையான புதுச்சேரியை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது. நமக்குள் இருக்கும் தன்னம்பிக்கை விதைகள் விருட்சமாக வளர வேண்டும்.

எந்தளவிற்கு மரக்கன்று நடுகிறோமோ அந்தளவிற்கு இயற்கை நமக்கு உதவி செய்யும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.நாம். இயற்கையோடு சேர்ந்து வாழத் துவங்கும்போது, இயற்கை நம்மை பாதுகாக்கும். சுனாமி, பூகம்பம் போன்றவற்றை தடுக்கும். சுற்றுச்சூழலையும், இயற்கையையும் பாதுகாக்க என்னால் முடிந்ததை செய்வேன் என்று மாணவர்கள் உறுதி ஏற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X