பொது செய்தி

இந்தியா

சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட கோரிக்கை

Added : செப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் 154வது பிறந்த நாள் விழா, கருவடிக்குப்பம் இடுகாட்டில் நேற்று நடந்தது.புதுச்சேரி வரலாற்றுப் பேரவை, ராதே அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்று சங்கரதாஸ் சுவாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.ராதே அறக்கட்டளை நிறுவனர். இன்ஜினியர் ராதே முன்னிலை வகித்தார். பேராசிரியர்
 சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட கோரிக்கை

புதுச்சேரி : நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் 154வது பிறந்த நாள் விழா, கருவடிக்குப்பம் இடுகாட்டில் நேற்று நடந்தது.புதுச்சேரி வரலாற்றுப் பேரவை, ராதே அறக்கட்டளை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், எதிர்க்கட்சித் தலைவர் சிவா பங்கேற்று சங்கரதாஸ் சுவாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ராதே அறக்கட்டளை நிறுவனர். இன்ஜினியர் ராதே முன்னிலை வகித்தார். பேராசிரியர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசுகையில், 'சங்கரதாஸ் சுவாமி 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் முக்கிய நபர்களில் ஒருவராக திகழ்ந்துள்ளார். குறிப்பாக, கூத்து மரபிலிருந்து நாடக அரங்கிற்கு உருமாறியதில் சங்கரதாஸ் சுவாமி முக்கியப் பங்காற்றியவர்.நவம்பர் 13ம் தேதி அவரது நினைவு தினத்தை அரசு கடைபிடித்து அஞ்சலி செலுத்தி வருகிறது. அதேபோல் அவரது பிறந்தநாளையும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X