சோரியாங்குப்பத்தில் 23 பேருக்கு கொரோனா

Added : செப் 08, 2021
Share
Advertisement
பாகூர் : பாகூர் அருகே ஒரே கிராமத்தில் 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாகூர் அடுத்த குருவிநத்தம் கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த வாரம் ஒரு சுப நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் பங்கேற்ற சோரியாங்குப்பத்தைச் சேர்ந்த பலர் காய்ச்சல், இருமலால் அவதிப்பட்டனர். தகவலறிந்த பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சோரியாங்குப்பம் கிராமத்தில்

பாகூர் : பாகூர் அருகே ஒரே கிராமத்தில் 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகூர் அடுத்த குருவிநத்தம் கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கடந்த வாரம் ஒரு சுப நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் பங்கேற்ற சோரியாங்குப்பத்தைச் சேர்ந்த பலர் காய்ச்சல், இருமலால் அவதிப்பட்டனர். தகவலறிந்த பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சோரியாங்குப்பம் கிராமத்தில் நேற்று முகாம் அமைத்து, நுாறு நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்ட 145 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தினர்.அதில், 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.சோரியாங்குப்பம் கிராமத்தில் கடந்த ஒரு வாரத்தில் 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.அருகில் உள்ள குருவிநத்தம் கிராமத்திலும் 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், சோரியாங்குப்பம் கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உடல் நிலை மோசமாக உள்ளவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர். மற்றவர்களுக்கு, மருந்து மாத்திரை வழங்கி வீட்டு தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X