கணவருடன் தகராறு பேராசிரியை தற்கொலை

Added : செப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கணவருடன் ஏற்பட்ட தகராறில், உதவி பேராசிரியை அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேரி, குயவர்பாளையம், புது அய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகள் உதயகுமாரி, 31; அய்யங்குட்டிப்பாளையம் கால்நடை மருத்துவக் கல்லுாரி உதவி பேராசிரியை.இவருக்கும், கண்டமங்கலம் பெரியபாபு சமுத்திரம் பாலாஜி, 33; என்பவருக்கும், கடந்த

புதுச்சேரி : கணவருடன் ஏற்பட்ட தகராறில், உதவி பேராசிரியை அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி, குயவர்பாளையம், புது அய்யனார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகள் உதயகுமாரி, 31; அய்யங்குட்டிப்பாளையம் கால்நடை மருத்துவக் கல்லுாரி உதவி பேராசிரியை.இவருக்கும், கண்டமங்கலம் பெரியபாபு சமுத்திரம் பாலாஜி, 33; என்பவருக்கும், கடந்த 2019ம் ஆண்டு பிப்., மாதம் திருமணம் நடந்தது. சம்பள பணத்தை தன்னிடம் தர வேண்டும் என கணவர் கூறியதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, உதயகுமாரி தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.பின்பு சமாதானம் ஆகி இணைந்தனர். பெண் குழந்தை பிறந்த பிறகு, மேட்டுப்பாளையத்தில் தனி குடித்தனம் சென்றனர். அக்கம்பக்கத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்ததால், உதயகுமாரி குழந்தையுடன் தந்தை வீட்டிற்கு வந்து விட்டார்.கடந்த 10 நாட்களுக்கு முன்பு, உதயகுமாரி விவாகரத்து பத்திரத்தை 'வாட்ஸ்ஆப்' மூலம் கணவருக்கு அனுப்பினார்.பாலாஜி, மனைவியை சமாதானம் செய்தபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்த உதயகுமாரி, கடந்த 5ம் தேதி, அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்.அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்தனர். திருமணமான 2 வருடத்தில் தற்கொலை செய்து கொண்டதால், தாசில்தார் விசாரணையும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X