சாலை ஆக்கிரமிப்பு

Added : செப் 08, 2021
Share
Advertisement
சென்னை : அம்பத்துார் காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே, கிழக்கு பூங்கா தெருவில் சாலையை ஆக்கிரமித்து 10க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன பேருந்துகள் நாட்கணக்கில் நிறுத்தப்படுகின்றன.அதனால் இந்த சாலை, ஒத்தையடி பாதையாக சுருங்கி விடுவதால், பாதசாரிகள், பள்ளி, கல்லுாரிக்குச் செல்லும் மாணவ - மாணவியர் என பலரும், சாலையில் நடந்து செல்ல வேண்டிய 'நெருக்கடி'

சென்னை : அம்பத்துார் காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அருகே, கிழக்கு பூங்கா தெருவில் சாலையை ஆக்கிரமித்து 10க்கும் மேற்பட்ட தனியார் நிறுவன பேருந்துகள் நாட்கணக்கில் நிறுத்தப்படுகின்றன.

அதனால் இந்த சாலை, ஒத்தையடி பாதையாக சுருங்கி விடுவதால், பாதசாரிகள், பள்ளி, கல்லுாரிக்குச் செல்லும் மாணவ - மாணவியர் என பலரும், சாலையில் நடந்து செல்ல வேண்டிய 'நெருக்கடி' உள்ளது.அதனால், அவர்கள் வாகன விபத்தில் சிக்கி பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. மேலும், இணைப்பு சாலைகளில் இருந்து கிழக்கு பூங்கா சாலைக்கு வரும் வாகன ஓட்டிகளுக்கு, பேருந்துகளின் ஆக்கிரமிப்பால் மறுபுறம் வரும் பாதசாரிகள், வாகனங்கள் தெரிவதில்லை. இதனாலும் விபத்துகள் தொடர்கின்றன.அங்கு வேகத் தடைகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. மேற்கண்ட பிரச்னைக்கு உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X