புதுச்சேரியில் நேரடி கொள்முதல் நிலையங்கள் இல்லை

Added : செப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை. அதன் காரணமாக, விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை, வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர்.இதனால், பெரும் நஷ்டம் ஏற்படுவதால், அரசே, நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரிலும், எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை. அதன் காரணமாக, விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை, வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்று வருகின்றனர்.

இதனால், பெரும் நஷ்டம் ஏற்படுவதால், அரசே, நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரிலும், எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி எழுப்பினர்.இந்நிலையில், மாநிலத்தில் அறுவடை செய்யும் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு கிடைத்திட அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதற்கான ஆலோசனைக் கூட்டம், சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்தது.கூட்டத்திற்கு, வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தலைமை தாங்கினார். குடிமைப்பொருள் வழங்கல் துறை செயலர் உதயகுமார், வேளாண் துறை செயலர் வல்லவன், இயக்குநர் பாலகாந்தி, கூடுதல் இயக்குனர் ஜெய்சங்கர், இந்திய உணவுக்கழக பொது மேலாளர் பி.என்.சிங், தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு மேலாளர் பிஜோய் ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அறுவடை செய்யும் நெல்லை, இந்திய உணவுக் கழகம் நேரடியாக கொள்முதல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.அதில், வரும் சம்பா பருவத்தில், இந்திய உணவுக் கழகம் மூலம் புதுச்சேரியில் கரையாம்புத்துார், மதகடிப்பட்டு மற்றும் தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் செய்வது என முடிவு செய்யப்பட்டது.காரைக்கால் பிராந்தியத்தில் நெடுங்காடு மற்றும் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்யவும் தீர்மானிக்கப் பட்டது.இதில், மத்திய அரசின் ஆதார விலையின்படி, சன்ன ரகம் குவிண்டால் ரூ.1,960க்கும், மோட்டா ரகம் ரூ.1,940க்கும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள், நெல்லை, கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வரும் போது ஈரப்பதம் இல்லாமலும், பதர்கள் இல்லாமல் துாற்றி எடுத்து வருமாறு அறிவுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.அரசின் இந்த நடவடிக்கையால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நெல்லுக்கு மத்திய அரசின் ஆதார விலை விவசாயிகளுக்கு கிடைக்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X