பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு தொற்று

Added : செப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் கல்லுாரி மாணவர்களை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்ததால், பள்ளி மற்றும் கல்லுாரிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.அதன்படி, கடந்த 1ம் தேதி முதல், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளும் மற்றும் கல்லுாரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.மாணவர்களுக்கு

புதுச்சேரி : புதுச்சேரியில் கல்லுாரி மாணவர்களை தொடர்ந்து, பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்ததால், பள்ளி மற்றும் கல்லுாரிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.அதன்படி, கடந்த 1ம் தேதி முதல், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகளும் மற்றும் கல்லுாரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.மாணவர்களுக்கு தொற்றுகிருமாம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லுாரியில் 3 மாணவிகளுக்கும், ஒரு பேராசிரியருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் கல்லுாரிக்கு விடுமுறை அளித்து, மற்ற மாணவிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், கரையாம்புத்துாரில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கும், கரியமாணிக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.அதையடுத்து, இவ்விரு பள்ளியிலும் மற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது.சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில்; 'மாணவர்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு வந்ததால் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. அவரவர் குடும்பத்தினர் மூலமே தொற்று ஏற்பட்டுள்ளது.குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொற்று பாதிப்பு வரும்போது, பிள்ளைகளுக்கும் பரவும். அதுபோல் தற்போது ஏற்பட்டுள்ளது.பள்ளிகளில் தொற்று பரவல் ஏற்படாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளோம்' என தெரிவித்தனர்.127 பேருக்கு தொற்றுபுதுச்சேரியில் நேற்று முன்தினம் 5,479 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், புதிதாக 127 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.171 பேர் அரசு மருத்துவமனைகளிலும், 803 பேர் லேசான அறிகுறியுடன் வீடுகளில் தனிமை படுத்தப்பட்டு உள்ளனர். மொத்தம் 974 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 1,24,311 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பரவல் சதவீதம் 2.32 ஆக உள்ளது.தொற்று பாதித்த 66 பேர், நேற்று முன்தினம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,21,518 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் சதவீதம் 97.75 ஆக உள்ளது.காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 46 வயது பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், மொத்த உயிரிழப்பு 1819 ஆக உயர்ந்தது. இறப்பு சதவீதம் 1.46 ஆக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X