பொது செய்தி

இந்தியா

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஆலேசானை கூட்டம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
பாகூர் : புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக, போலீசார்- வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் வரவேற்றார். போக்குவரத்து எஸ்.பி., சுப்ரமணியன் பேசுகையில், புதுச்சேரி - கடலுார் சாலையில் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த பல்வேறு

பாகூர் : புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக, போலீசார்- வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்தில், இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன் வரவேற்றார். போக்குவரத்து எஸ்.பி., சுப்ரமணியன் பேசுகையில், புதுச்சேரி - கடலுார் சாலையில் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தவளக்குப்பம், அரியாங்குப்பம், கிருமாம்பாக்கம் போன்ற முக்கிய சந்திப்புகளில், பொது மக்கள் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.வியாபாரிகள் தங்களது கடை முன்பு நிறுத்தப்படும், வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் நிறுத்திட பொது மக்களிடம் அறிவுறுத்த வேண்டும்.வியாபாரிகளும், பொது மக்களும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே சாலை விபத்துகளை தடுத்திட முடியும் என்றார்.சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X