பொது செய்தி

தமிழ்நாடு

மீண்டும் நிழற்குடை அமைக்கப்படுமா?

Added : செப் 08, 2021
Share
Advertisement
ஷெனாய் நகர் : அமைந்தகரை டோல்கேட் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அகற்றப்பட்ட நிழற்குடையை, மீண்டும் அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஷெனாய் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பச்சையப்பன் கல்லுாரி அருகில், அமைந்தகரை 'டோல்கேட' பஸ் நிறுத்தம் உள்ளது.இந்த நிறுத்தத்தில், பிராட்வே - பூந்தமல்லி வரை செல்லும், 15பி, 27பி, 59, 159 உள்ளிட்ட பேருந்துகள் நின்று செல்கின்றன.

ஷெனாய் நகர் : அமைந்தகரை டோல்கேட் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அகற்றப்பட்ட நிழற்குடையை, மீண்டும் அமைக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஷெனாய் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பச்சையப்பன் கல்லுாரி அருகில், அமைந்தகரை 'டோல்கேட' பஸ் நிறுத்தம் உள்ளது.இந்த நிறுத்தத்தில், பிராட்வே - பூந்தமல்லி வரை செல்லும், 15பி, 27பி, 59, 159 உள்ளிட்ட பேருந்துகள் நின்று செல்கின்றன. இங்கிருந்து, தினமும் 500க்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.இங்கிருந்த நிழற்குடை, இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடப்பிரச்னையால் அகற்றப்பட்டது. தொடர்ந்து, மழை நீர் வடிகால் பணிகள் நடந்தன. இதனால், நிழற்குடை இதுவரை அமைக்கப்படவில்லை.இதனால், முதியோர் மற்றும் பெண்கள் வெயிலிலும் மழையிலும் தவித்து வருகின்றனர்.இனியாவது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X