மனைவிக்கு கத்திக்குத்து கணவனுக்கு வலை வீச்சு

Added : செப் 08, 2021 | |
Advertisement
கோயம்பேடு : மது அருந்த பணம் கொடுக்காத மனைவியை, கத்தியால் குத்திய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல், 55. இவரது மனைவி சரஸ்வதி, 48. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, சரஸ்வதி ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு சென்ற ஜெயவேல், மது அருந்த பணம்

கோயம்பேடு : மது அருந்த பணம் கொடுக்காத மனைவியை, கத்தியால் குத்திய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவேல், 55. இவரது மனைவி சரஸ்வதி, 48. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, சரஸ்வதி ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு சென்ற ஜெயவேல், மது அருந்த பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.சரஸ்வதி சத்தம் போடவே, மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியின் கையில் குத்தி விட்டு, ஜெயவேல் தப்பினார். காயமடைந்த சரஸ்வதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X