சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாடியிலிருந்து விழுந்தவரால் கீழே நின்ற தொழிலாளி பலி.

Added : செப் 08, 2021
Share
Advertisement
திருவேற்காடு : மாடியில் இருந்து தவறி விழுந்தவரால், கீழே நின்ற மற்றொரு தொழிலாளி பலியானார்.அம்பத்துார் அடுத்த திருவேற்காடு சுந்தரசோழபுரத்தில், தனியார் கட்டுமான நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடக்கிறது. அதில், வடமாநில தொழிலாளர்கள் பலர் வேலை செய்கின்றனர்.கடந்த மாதம் 27ம் தேதி காலை, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாபுலா நாஹெக், 24, என்பவர் கீழ் தளத்தில் வேலை

திருவேற்காடு : மாடியில் இருந்து தவறி விழுந்தவரால், கீழே நின்ற மற்றொரு தொழிலாளி பலியானார்.

அம்பத்துார் அடுத்த திருவேற்காடு சுந்தரசோழபுரத்தில், தனியார் கட்டுமான நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடக்கிறது. அதில், வடமாநில தொழிலாளர்கள் பலர் வேலை செய்கின்றனர்.கடந்த மாதம் 27ம் தேதி காலை, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாபுலா நாஹெக், 24, என்பவர் கீழ் தளத்தில் வேலை செய்தார். அப்போது, இரண்டாவது தளத்தில் வேலை செய்த பக்டார் பெகரா, 30, என்பவர் தவறி விழுந்த போது, கீழே இருந்த பாபுலா நாஹெக் மீது விழுந்தார். இதில் பாபுலா நாஹெக்கிற்கு இடுப்பு எலும்பு முறிந்தது. இருவரும், ராஜிவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பாபுலா நாஹெக், நேற்று காலை 9:30 மணியளவில் இறந்தார். திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X