பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு அபாயத்தில் நாட்டார் குளம் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

Added : செப் 08, 2021
Share
Advertisement
வேளச்சேரி : வேளச்சேரியில், இருபது ஆண்டுக்கு பின் சீரமைக்கப்பட்ட குளம், மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்க வாய்ப்புள்ளதால், குளத்தை பாதுகாக்க, மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.அடையாறு மண்டலம், 178 வது வார்டு வேளச்சேரியில், ஒரு ஏக்கர் பரப்பளவில் நாட்டார் குளம் உள்ளது.இந்த குளம், சாலை மட்டத்தில் இருந்ததால், மழை நீர் சேமிக்க

வேளச்சேரி : வேளச்சேரியில், இருபது ஆண்டுக்கு பின் சீரமைக்கப்பட்ட குளம், மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்க வாய்ப்புள்ளதால், குளத்தை பாதுகாக்க, மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

அடையாறு மண்டலம், 178 வது வார்டு வேளச்சேரியில், ஒரு ஏக்கர் பரப்பளவில் நாட்டார் குளம் உள்ளது.இந்த குளம், சாலை மட்டத்தில் இருந்ததால், மழை நீர் சேமிக்க முடியாத நிலையில் இருந்தது.கோரிக்கைஇதை சாதகமாக பயன்படுத்த முயன்ற ஆக்கிரமிப்பாளர்கள், குளத்தில், மண் சாலை அமைத்து, ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், 2019ம் ஆண்டு, ஏற்பட்ட வறட்சியை தொடர்ந்து, நீர்நிலைகளை சீரமைக்க, 'களமிறங்குவோம் நமக்கு நாமே' என, நலச்சங்கங்கள், தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்து, நம் நாளிதழ், அறிவிப்பு வெளியிட்டது.இதை தொடர்ந்து, வேளச்சேரி கட்டபொம்மன் நண்பர்கள் சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள், தன்னார்வலர்கள் சேர்ந்து குளத்தை துார் வார களம் இறங்கினர்.மொத்தம், ஒரு லட்சம் ரூபாய் செலவில், 7 அடி ஆழத்தில் குளம் துார் வாரப்பட்டது; சுற்றி தடுப்பும் அமைக்கப்பட்டது.தொடர்ந்து, மாநகராட்சி அனுமதியில், இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு, மேலும், 5 அடி ஆழத்தில் துார் வாரி, மைய பகுதியில், 3 அடி ஆழத்தில், மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைத்தது.பாதுகாப்புதொடர்ந்து பெய்த, பருவமழையின்போது குளம் நிரம்பியது. இருபது ஆண்டுக்கு பின் குளம் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால், சுற்றுவட்டார பகுதிமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.சுற்றுவட்டார பகுதியில், நிலத்தடி நீர் மட்டம் உயர, இந்த குளம் காரணமாக உள்ளது. ஆனால், சுற்றி அமைத்த தடுப்பு வேலியை தகர்த்து, மீண்டும், சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக புகார் எழுந்துள்ளது. தொகுதி எம்.எல்.ஏ., நிதியில், குளத்தை சுற்றி தடுப்பு சுவர் கட்டி, நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, கடந்த ஆண்டு மாநகராட்சி அறிவித்தது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, அப்பகுதியில் வசிப்போர் கூறியுள்ளனர். தற்போது, குளத்தை சுற்றி புதர் வளர்ந்து, போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இது ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக அமைந்து விடும். இதை உணர்ந்து, குளத்தை பாதுகாக்க, மாநகராட்சி போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X