செத்து மிதந்த மீன்கள் அகற்றம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
வேங்கைவாசல் : வேங்கைவாசல் பெரிய ஏரி உபரிநீர் கால்வாயில், செத்து மிதந்த மீன்கள் அகற்றப்பட்டன. சென்னை புறநகரில் உள்ள, வேங்கைவாசல் ஊராட்சியில், பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில், 102 ஏக்கரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில், 2.1 கோடி ரூபாய் மதிப்பில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இப்பணிகளில், பறவைகள் அமர்ந்து இளைபாற, குட்டி தீவு அமைப்பதற்காக, பெரிய

வேங்கைவாசல் : வேங்கைவாசல் பெரிய ஏரி உபரிநீர் கால்வாயில், செத்து மிதந்த மீன்கள் அகற்றப்பட்டன.

சென்னை புறநகரில் உள்ள, வேங்கைவாசல் ஊராட்சியில், பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில், 102 ஏக்கரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில், 2.1 கோடி ரூபாய் மதிப்பில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இப்பணிகளில், பறவைகள் அமர்ந்து இளைபாற, குட்டி தீவு அமைப்பதற்காக, பெரிய ஏரியில், சில தினங்களுக்கு முன், தண்ணீர் வெளியேற்றப்பட்டது.ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்பட்ட போது, ஏராளமானா மீன்களும், அடித்து செல்லப்பட்டன.வெளியேறிய நீர், அதன் உபரி நீர் கால்வாயில் தேங்கி நின்றது. அதில், கழிவுநீர் கலந்ததாக கூறப்படுகிறது. இதனால், கால்வாயில் நுாற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.நேற்று முன்தினம் மதியம் வரை, இது பற்றி, பொது பணித்துறை அதிகாரிகளுக்கு, தகவல் தெரியவில்லை. பின், பகுதி மக்கள் தகவல் தெரிவித்த பின், மீன்களை அகற்றியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.எனினும், மீன்கள் இறப்புக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியில் வசிப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X