பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியில் சிறப்பான செயல்பாடு அடையாறு மண்டலத்திற்கு பாராட்டு சான்று

Added : செப் 08, 2021
Share
Advertisement
அடையாறு : சென்னை மாநகராட்சியில், ஒருங்கிணைந்த துாய்மை பணியில், சிறப்பாக செயல்பட்டதற்காக, அடையாறு மண்டலத்திற்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.அடையாறு மண்டலத்தில் உள்ள, 13 வார்டுகளில், 2,020 தெருக்கள் உள்ளன. கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் முதல், செயல்திறன் அளவீட்டு முறையில், குப்பை கையாளும் பணியை, உர்பசர்சுமித் நிறுவனம் செய்கிறது.வாகனங்கள்தினமும், 530 டன் குப்பை

அடையாறு : சென்னை மாநகராட்சியில், ஒருங்கிணைந்த துாய்மை பணியில், சிறப்பாக செயல்பட்டதற்காக, அடையாறு மண்டலத்திற்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது.

அடையாறு மண்டலத்தில் உள்ள, 13 வார்டுகளில், 2,020 தெருக்கள் உள்ளன. கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் முதல், செயல்திறன் அளவீட்டு முறையில், குப்பை கையாளும் பணியை, உர்பசர்சுமித் நிறுவனம் செய்கிறது.வாகனங்கள்தினமும், 530 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இதற்காக, 2,226 தொட்டிகள், 510 பேட்டரி வாகனங்கள், 24 காம்பெக்ட் லாரிகள் உள்ளன. பொதுமக்களிடம் இருந்து, குப்பையை தரம் பிரித்து வாங்க, ஒரு பேட்டரி வாகனத்தில், 8 சிறிய தொட்டிகள் இருக்கும்.தினமும், மூன்று 'சிப்ட்' முறையில் பணி நடக்கிறது. இதற்காக, 700 துாய்மை ஊழியர்கள் உள்ளனர்.மரம், கட்டட கழிவுகளை அப்புறப்படுத்த, இரண்டு டிப்பர் லாரிகள், இரவில் பிரதான சாலைகளில் சேரும் மண், குப்பையை உறிஞ்சி சுத்தம் செய்ய, 6 நவீன லாரிகள் உள்ளன.கடந்த இரண்டு மாதமாக, ஒருங்கிணைந்த துாய்மை பணி நடக்கிறது. பொறியியல்துறை, சுகாதாரதுறை இணைந்து, இந்த பணியை மேற்கொண்டது.நாள்கணக்கில் தேங்கிய குப்பையை அகற்றுதல், கட்டடம் மற்றும் மரக்கழிவுகள் அகற்றுதல், காலி இடங்களை சுத்தம் செய்தல், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளை சுத்தம் செய்தல், அரசு துறை வளாகங்கள் சுத்தம் செய்தல் போன்ற பணிகள், ஒருங்கிணைந்த துாய்மை பணியில் நடந்தது.பணிகள்இதில், சிறப்பாக செயல்பட்டதாக, சென்னை மாநகராட்சியில் உள்ள, 15 மண்டலங்களில், அடையாறு மண்டலத்தை, மாநகராட்சி தேர்வு செய்தது. இதற்காக, நேற்று முன்தினம், பாராட்டு சான்று வழங்கப்பட்டது.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர், அடையாறு மண்டல அதிகாரி திருமுருகனிடம் பாராட்டு சான்று வழங்கினர்.இதில், மாநகராட்சி அதிகாரிகள், துாய்மை பணி ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X