பொது செய்தி

இந்தியா

27ல் பந்த் போராட்டம் தொழிற்சங்கங்கள் ஆலோசனை

Added : செப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : அனைத்து தொழிற்சங்கள் சார்பில் நாடுதழுவிய பந்த் போராட்டத்தை புதுச்சேரியில் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் 27ம் தேதி நாடு தழுவிய பந்த் போராட்டம் நடத்தப்பட உள்ளது.இந்த போராட்டத்தை புதுச்சேரியில் வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக, அனைத்து தொழில் சங்கங்கள், விவசாய

புதுச்சேரி : அனைத்து தொழிற்சங்கள் சார்பில் நாடுதழுவிய பந்த் போராட்டத்தை புதுச்சேரியில் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் 27ம் தேதி நாடு தழுவிய பந்த் போராட்டம் நடத்தப்பட உள்ளது.இந்த போராட்டத்தை புதுச்சேரியில் வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக, அனைத்து தொழில் சங்கங்கள், விவசாய சங்கங்கள், இளைஞர் மாணவர் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. முதலியார்பேட்டையில் நடந்த கூட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் தினேஷ் பொன்னையா, சேதுசெல்வம், முருகன், துரைசெல்வம், சீனுவாசன், ஞானசேகரன், விவசாய சங்கம் கீதநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பந்த் போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகளின் ஆதரவை கோருவது என முடிவு செய்யப்பட்டது. போராட்டத்தை விளக்கி, 14ம் தேதி கருத்தரங்கம் நடத்துவது, 23ம் தேதி கிராமங்களிலும், 24, 25ம் தேதிகளில் நகரம் முழுவதும் பிரசாரம் செய்வது, 12 இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X