பொது செய்தி

இந்தியா

வீட்டின் கதவை உடைத்து 2 சவரன் நகை திருட்டு

Added : செப் 08, 2021
Share
Advertisement
திருக்கனுார் : சோரப்பட்டில் வீட்டின் கதவை உடைத்து, 2 சவரன் நகைகளை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் லோகநாதன், 80; இவரது மனைவி சிவகாமி. லோகநாதனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தனது மனைவியுடன் முதலியார்பேட்டையில் உள்ள மகன் பழனி வீட்டில் கடந்த 30ம் தேதி முதல்

திருக்கனுார் : சோரப்பட்டில் வீட்டின் கதவை உடைத்து, 2 சவரன் நகைகளை திருடி சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் லோகநாதன், 80; இவரது மனைவி சிவகாமி. லோகநாதனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தனது மனைவியுடன் முதலியார்பேட்டையில் உள்ள மகன் பழனி வீட்டில் கடந்த 30ம் தேதி முதல் தங்கி, சிகிச்சை பெற்று வருகிறார்.நேற்று முன்தினம், இவரது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதாக, அப்பகுதியை சேரந்தவர்கள் பழனிக்கு தகவல் தெரிவித்தனர். பழனி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 சவரன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. புகாரின் பேரில் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X