சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்தவர் கைது

Added : செப் 08, 2021
Share
Advertisement
குன்றத்துார் : குன்றத்துாரில், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்த நபரை, பொதுமக்கள் மடக்கி பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அனகாபுத்துாரை சேர்ந்த முத்துராமன், 48. அப்பகுதியில் உள்ள காயலான் கடையில் வேலை செய்து வந்தார். இவர், மன அழுத்த நோய்க்கு மருந்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், வீட்டை விட்டு

குன்றத்துார் : குன்றத்துாரில், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்த நபரை, பொதுமக்கள் மடக்கி பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அனகாபுத்துாரை சேர்ந்த முத்துராமன், 48. அப்பகுதியில் உள்ள காயலான் கடையில் வேலை செய்து வந்தார். இவர், மன அழுத்த நோய்க்கு மருந்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், வீட்டை விட்டு வெளியேறிய முத்துராமன், திருவள்ளூருக்கு சென்றார்.கையில், பணம் இல்லாததால், வழியில், மனஞ்சேரியில், சாலையை ஒட்டியுள்ள, தனியார் ஏ.டி.எம்., மையத்திற்குள் சென்றார். பின், ஏ.டி.எம்., கார்டு இல்லாததால், கார்டு இல்லாமல் பணம் எடுக்க எண்ணி, கல்லை எடுத்து, ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்தார்.இதில், இயந்திரம் சேதமானது. இதற்கிடையில், ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், முத்துராமனை மடக்கி பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து, குன்றத்துார் போலீசார் வழக்கு பதிந்து, முத்துராமனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X