சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரகளை மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை; கல்லூரிகளுக்கு சென்னை போலீஸ் கடிதம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
சென்னை : 'ரூட் தல' பிரச்னை காரணமாக, ரகளையில் ஈடுபட்டு வரும், 208 மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை மாநகர போலீசார், கல்லுாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.கல்லுாரிகளுக்கு பஸ் மற்றும் ரயில்களில் வந்து செல்லும் மாணவர்கள், 'ஹீரோயிசம்' மற்றும் மாணவியரிடம் கெத்து காட்டுதல் உள்ளிட்ட அற்பத்தனமான காரணங்களுக்காக, 'ரூட் தல' போல செயல்பட்டு

சென்னை : 'ரூட் தல' பிரச்னை காரணமாக, ரகளையில் ஈடுபட்டு வரும், 208 மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை மாநகர போலீசார், கல்லுாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

கல்லுாரிகளுக்கு பஸ் மற்றும் ரயில்களில் வந்து செல்லும் மாணவர்கள், 'ஹீரோயிசம்' மற்றும் மாணவியரிடம் கெத்து காட்டுதல் உள்ளிட்ட அற்பத்தனமான காரணங்களுக்காக, 'ரூட் தல' போல செயல்பட்டு மோதிக்கொள்கின்றனர்.அரிவாள் வெட்டு, கத்திக்குத்து, ரயில் படிக்கட்டுகளில் சாகச பயணம் செய்து, கத்தியை நடைமேடைகளை உரசி தீப்பொறி பறக்கச் செய்தல் என, காட்டுமிராண்டிகள் போல நடந்து கொள்கின்றனர்.இவர்களை, 'லெட்டர் போர்டு' கட்சியினர் உசுப்பேற்றி, ரணகளப்படுத்தி, எதிர்காலத்தை சீரழித்தும் வருகின்றனர். மாணவர் நலனை கருத்தில் வைத்து, கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையிலும், செப்., 1ல் இருந்து, கல்லுாரிகள் திறக்கப்பட்டு உள்ளன.முதல் நாளிலேயே, சென்னை பச்சையப்பன், மாநிலக் கல்லுாரி மாணவர்கள், சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 'ரூட் தல' பிரச்னை காரணமாக மோதிக்கொண்டனர். இதை கண்ட பொதுமக்கள் பீதியில் உறைந்தனர்.'ரகளையில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், 208 பேரை அடையாளம் கண்டு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என, அவர்கள் பயின்று வரும் கல்லுாரிகளுக்கு, சென்னை மாநகர போலீசார் கடிதம் எழுதி உள்ளனர்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'ரகளை மாணவர்கள் குறித்து, ஏற்கனவே எங்களிடம் பட்டியல் உள்ளது. இவர்களிடம், இனி ரகளையில் ஈடுபட மாட்டோம் என, உறுதிமொழி பத்திரமும் பெறப்பட்டுள்ளது. இதை மீறி ரகளையில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவர்' என்றனர்.'பஸ் டே' நடத்தினால் வழக்குகல்லுாரிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, செம்பியம் பகுதியில் மாணவர்கள் 'பஸ் டே' கொண்டாடியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாணவர்கள், பெற்றோர் ஆகியோரை போலீசார் அழைத்து, வியாசர்பாடி அம்பேத்கர் கலைக்கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.இதில், செம்பியம் உதவி கமிஷனர் செப்பேடு பாபு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ஜவகர், சதீஷ், அம்பேத்கர் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்தனர்.அப்போது, விதிமீறும் மாணவர்கள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படும். அதனால், படிப்பு முடிந்து வேலை தேடும் போது, நன்னடத்தை சான்றிதழ் கிடைக்க சிரமம் ஏற்படும். மேலும், பேருந்து கூரை மீது ஏறி அபாயகரமான பயணங்களை தவிர்ப்பது நல்லது' என, ஆலோசனை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X