பொது செய்தி

தமிழ்நாடு

24 மெட்ரோ நிலைய கட்டுமான பணிகள் 'எல் அண்டு டி' நிறுவனத்திற்கு ஒப்பந்தம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
சென்னை : மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 63 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் இடையே, 26.1 கி.மீ., மாதவரம் - சிறுசேரி இடையே, 45.8 கி.மீ., மாதவரம் - சோழிங்கநல்லுார் இடையே, 47 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. இப்பாதைகள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணி, பல பிரிவுகளாக நடந்து

சென்னை : மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்தில், 63 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில், 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் இடையே, 26.1 கி.மீ., மாதவரம் - சிறுசேரி இடையே, 45.8 கி.மீ., மாதவரம் - சோழிங்கநல்லுார் இடையே, 47 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்பட உள்ளது. இப்பாதைகள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணி, பல பிரிவுகளாக நடந்து வருகிறது.இத்திட்டத்தில், மாதவரம் - சோழிங்கநல்லுார் இடையே, 47 கி.மீ., மெட்ரோ பாதை கட்டுமான பணிகளை விரைவாக முடிக்க ஏதுவாக, நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இப்பாதையில், 48 நிலையங்கள் அமைகின்றன. இப்பாதையில், வேணுகோபால் நகர் - சி.எம்.பி.டி., இடையே, 10.2 கி.மீ., துாரம் பாதை மற்றும் நிலைய கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை, 'எல் அண்டு டி' நிறுவனம் பெற்றுள்ளது. இதில், ஒரு சுரங்க ரயில் நிலையம், தரைக்கு மேல், 11 நிலையங்கள் என, மொத்தம் 12 நிலையங்கள் கட்டப்படும்.சி.எம்.பி.டி.,யில் இருந்து புழுதிவாக்கம் வரை, 12.43 கி.மீ., மெட்ரோ பாதையில், சாய் நகர் பஸ் நிறுத்தம், இளங்கோ நகர் பஸ் நிறுத்தம், முகலிவாக்கம், டி.எல்.எப்., சத்யா நகர், ஆலந்துார், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை உட்பட தரைக்கு மேல் மெட்ரோ பாதையில், 12 நிலையங்கள் கட்டுவதற்கும் இந்நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X