எழும்பூர் பெயரை மாற்ற வேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'எழும்பூர் பெயரை மாற்ற வேண்டும்'

Added : செப் 08, 2021
Share
சென்னை : ''எழும்பூர் பெயரை 900 ஆண்டு கால பழமை தொடர்வதற்கு எழுமூர் என மாற்றி, அரசு உத்தரவிட வேண்டும்,'' என, எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ., பரந்தாமன் பேசினார்.சட்டசபையில் அவர் பேசியதாவது: சோழர் காலத்தில் எழுமூர் என்று அழைத்ததை, இப்போது எழும்பூர் அல்லது எக்மோர் என அழைக்கின்றனர். குலோத்துங்க சோழன் கால கல்வெட்டில், நிர்வாக பிரிவின் தலைநகராக 'எழுமூர் நாடு' என்று

சென்னை : ''எழும்பூர் பெயரை 900 ஆண்டு கால பழமை தொடர்வதற்கு எழுமூர் என மாற்றி, அரசு உத்தரவிட வேண்டும்,'' என, எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ., பரந்தாமன் பேசினார்.

சட்டசபையில் அவர் பேசியதாவது: சோழர் காலத்தில் எழுமூர் என்று அழைத்ததை, இப்போது எழும்பூர் அல்லது எக்மோர் என அழைக்கின்றனர். குலோத்துங்க சோழன் கால கல்வெட்டில், நிர்வாக பிரிவின் தலைநகராக 'எழுமூர் நாடு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.விஜயநகர கால கல்வெட்டத்தில், திருவொற்றியூரில் இருந்த மடத்திற்கு, சேத்துப்பட்டில் வசித்தவர்கள் மானியம் கட்டியதாக செய்திகள் உள்ளன. இவை மூன்றும் எழும்பூரை குறிக்கிறது. பேச்சில் திரிந்து எழும்பூர் ஆகிவிட்டது. ழகரத்தை உச்சரிக்க இயலாத ஆங்கிலேயர்கள் ஆவணங்களில் எழும்பூர், எக்மோர் என குறித்தனர்.எனவே, எழும்பூர் தமிழ் இலக்கணப்படி வைத்த பெயர் அல்ல. 900 ஆண்டுகால பழமை தொடர்வதற்கு, எழும்பூரை எழுமூர் என திருத்தம் செய்து, அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X