பொது செய்தி

இந்தியா

முன்னாள் கவர்னர் பிறந்த நாள் விழா

Added : செப் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி முன்னாள் முதல்வரும், கேரளா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் முன்னாள் கவர்னருமான பாரூக்கின் 84வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.புதுச்சேரி, வைசியாள் வீதியில் உள்ள காங்., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சர் ஷாஜகான் முன்னிலை வகித்தார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., மாநில தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கி, பாரூக் படத்திற்கு மாலை
 முன்னாள் கவர்னர் பிறந்த நாள் விழா

புதுச்சேரி : புதுச்சேரி முன்னாள் முதல்வரும், கேரளா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் முன்னாள் கவர்னருமான பாரூக்கின் 84வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி, வைசியாள் வீதியில் உள்ள காங்., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சர் ஷாஜகான் முன்னிலை வகித்தார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., மாநில தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கி, பாரூக் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காங்., நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.மேலும், காலாப்பட்டு வடக்கு வட்டார காங்., தலைவர் முகுந்தராஜ் தலைமையில் பெரிய காலாப்பட்டிலும், வடக்கு மாவட்ட தலைவர் முத்துராமன் தலைமையில் சிவாஜி சிலை சந்திப்பிலும், வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் சுகுமார் தலைமையில் நாவலர் பள்ளி சந்திப்பிலும், பாரூக் பிறந்த நாள் கொண்டாடப் பட்டது.தட்டாஞ்சாவடி மேற்கு வட்டார காங்., தலைவர் வேணுகோபால் தலைமையில் ஏர்ப்போர்ட் சாலையில் பாரூக் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X