பொது செய்தி

தமிழ்நாடு

வேதிக் ஜி.பி.எஸ்., ஆவணப்படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது

Added : செப் 08, 2021
Share
Advertisement
சென்னை : டில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில், லதா கிருஷ்ணா எழுதி இயக்கிய, 'வேதிக் - ஜி.பி.எஸ்.,' என்ற ஆவணப்படம், வெனிஸ் நாட்டில் நடந்த, ஹெர்மீடிக் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஆராய்ச்சி அடிப்படையிலான ஆவணப்பட விருதை பெற்றுள்ளது.இந்த ஆவணப்படத்தை, சென்னை கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் தயாரித்துள்ளது. இந்தாண்டு மாஸ்கோவில் நடந்த, 'எஸோடெரிக்' சர்வதேச

சென்னை : டில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையம் சார்பில், லதா கிருஷ்ணா எழுதி இயக்கிய, 'வேதிக் - ஜி.பி.எஸ்.,' என்ற ஆவணப்படம், வெனிஸ் நாட்டில் நடந்த, ஹெர்மீடிக் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த ஆராய்ச்சி அடிப்படையிலான ஆவணப்பட விருதை பெற்றுள்ளது.

இந்த ஆவணப்படத்தை, சென்னை கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் தயாரித்துள்ளது. இந்தாண்டு மாஸ்கோவில் நடந்த, 'எஸோடெரிக்' சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டது.வேத ஜோதிடத்தில் இரண்டு கண்ணோட்டங்கள் உள்ளன. இது மேற்கத்திய புத்திசாலிகள், ஆன்மிகம் தேடுவோர், இந்திய சிந்தனையாளர்கள் ஆகியோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.தங்கள் எதிர்காலத்தை தெரிந்து கொள்ளும் ஆசையால், சாமானிய மனிதனுக்கு ஜோதிடத்தின் மீது ஏக்கம் இருக்கிறது. இந்த ஆவணப்படம், வேத ஜோதிடத்தை நவீன அடிப்படையில் வழங்கியுள்ளது.இதன் இயக்குனர் லதா கிருஷ்ணா, கேன்ஸ் விருது உட்பட மற்ற உலகளாவிய விருதுகளை வென்று உள்ளார்.

இந்த ஆவணப்படத்திற்கு, அணுசக்தி இயற்பியலாளரும், வேத ஜோதிடருமான டாக்டர் சங்கர பகவத்பாதாவுடன் ஆலோசகராகவும், மூத்த தொலைக்காட்சி தயாரிப்பாளர் டாக்டர் மோகன கிருஷ்ணசாமி நிர்வாக தயாரிப்பாளராகவும் இருந்துள்ளனர்.பண்டைய இந்திய நுால்கள் என்ன சொல்கின்றன; அவை எவ்வளவு அறிவியல் பூர்வமானவை;ஒரு ஒழுக்கத்திற்கான கண்ணோட்டம் எப்படி இருந்தது என்பதை படம் விவரிக்கிறது.ஒரு சிலரால் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு மாய கலை வடிவமாக பார்க்கப்பட்டதில் இருந்து, வேத ஜோதிடம் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டு, அறிவியலாக கற்பிக்கப்பட்டது.வேத ஜோதிடத்தின் மிகவும் மதிப்பிற்குரிய பயிற்சியாளர்கள், பண்டிட் சஞ்சய் ரத், காயத்ரி தேவி வாசுதேவ், சர்பானி ரத், ராஜேஷ் சவுத்ரி மற்றும் ராமன் சுப்ரஜாராமா உட்பட பலர் வாயிலாக இந்த விஷயங்களை படம் விளக்குகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X