பொது செய்தி

தமிழ்நாடு

விளம்பர பதாகைகள் அகற்றும் பணி தீவிரம்

Added : செப் 08, 2021
Share
Advertisement
சென்னை : சென்னையை தொடர்ந்து, அண்டை மாவட்டங்களான, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களிலும், விதி மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விதிகளை மீறி, விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருப்பது குறித்து. நம் நாளிதழில் படங்களுடன் கூடிய விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர்
 விளம்பர பதாகைகள்  அகற்றும் பணி தீவிரம்

சென்னை : சென்னையை தொடர்ந்து, அண்டை மாவட்டங்களான, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களிலும், விதி மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விதிகளை மீறி, விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருப்பது குறித்து. நம் நாளிதழில் படங்களுடன் கூடிய விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி கமிஷனர் உத்தரவுப்படி, சென்னையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டன. புறநகர் பகுதிகளான, ஓ.எம்.ஆர்., மற்றும் இ.சி.ஆர்., பகுதிகளிலும் விதிமீறிய பேனர்கள் அகற்றப்பட்டன.

அந்த வகையில், சென்னையில் நேற்று வரை, 205 விளம்பர பதாகைகள், 584 பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில், இதுவரை 36 விளம்பர பலகைகள், 126 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டு உள்ளன.காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அதிகாரிகள் சாட்டை சுழற்றி வருவதால், அங்கும் பேனர்கள் அகற்றும் பணி தீவிர கதியில் நடந்து வருகிறது. தமிழகம் முழுதும் விதிமீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை, இம்மாதம், 20ம் தேதிக்குள் அகற்ற, மாவட்ட நிர்வாகத்திற்கு மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X